வீடு / சமையல் குறிப்பு / Nanjil Rasa Vada

Photo of Nanjil Rasa Vada by Janaki Priya at BetterButter
205
4
0.0(1)
0

Nanjil Rasa Vada

Oct-27-2017
Janaki Priya
240 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

 • வெஜ்
 • மீடியம்
 • பண்டிகை காலம்
 • தமிழ்நாடு
 • பாய்ளிங்
 • ஃபிரையிங்
 • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

 1. பருப்பு வடைகள் -10
 2. #இரசப்பொடிக்கு
 3. தனியா - 1 மேசைக்கரண்டி
 4. நல்ல மிளகு- 2தேக்கரண்டி
 5. சீரகம்- 2 தேக்கரண்டி
 6. காய்ந்த சிகப்பு மிளகாய் - 5
 7. பூண்டு-2 பல்
 8. #இரசத்திற்கு
 9. பூண்டு- 10 பல்
 10. தக்காளி - 1 பெரியது
 11. உப்பு - தேவையான அளவு
 12. மஞ்சள்தூள் - 1/2 தேக்கரண்டி
 13. புளி - எலுமிச்சை அளவு
 14. கொத்தமல்லி இலை - ஒரு கொத்து
 15. #தாளித்துஇறக்க
 16. எண்ணெய் - 2 தேக்கரண்டி
 17. கடுகு - 1/2 தேக்கரண்டி
 18. சீரகம் - 1/2 தேக்கரண்டி
 19. வெந்தயம் -1/4 தேக்கரண்டி
 20. காய்ந்த சிகப்பு மிளகாய் -3
 21. கறிவேப்பிலை - ஒரு கொத்து

வழிமுறைகள்

 1. மிக்ஸியில் தனியா, நல்ல மிளகு,சீரகம், காய்ந்த சிகப்பு மிளகாய்,பூண்டு (2 பல்) சேர்த்து பொடியாக அரைத்துக் கொள்ளவும்.
 2. பின்பு வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, சீரகம்,வெந்தயம், காய்ந்த சிகப்பு மிளகாய்,கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
 3. பின் பூண்டுப்பல்களை அதனுடன் சேர்த்து பச்சைவாசனை போகும் வரை நன்கு வதக்கவும்.
 4. பின் தக்காளிபழத் துண்டுகளை சேர்த்து, 2 நிமிடம் வரை மிதமான சூட்டில் அதி மென்மையாகும் வரை வதக்கவும்.
 5. இதனுடன் புளி தண்ணீர் சேர்த்து அதனுடன் உப்பு, மஞ்சள்தூள் மற்றும் அரைத்து வைத்துள்ள இரசப்பொடியையும் சேர்ந்து 5 நிமிடம் கொதிக்க விடவும்.
 6. இதனுடன் பெருங்காயத்தூள் சேர்த்து , கொத்தமல்லி இலைகளை தூவவும்.  
 7. மிதமான சூட்டில் இரசத்தை  3 நிமிடம் வரை கொதிக்க விட்டு தீயை அணைக்கவும்.
 8. பின் சூடான இரசத்தில் பருப்பு வடைகளை போட்டு மூடி வைக்கவும்.
 9. வடைகள் சற்று கடினமாக இருந்தால் போஃர்க்கினால் வடைகள் உடையாமல் அங்காங்கே சிறிது ஒட்டையிட்டு பின் இரசத்தில் போடவும்.
 10. வடைகளை 3 மணி நேரம் வரை இரசத்தில் ஊற வைக்கவும்.
 11. ருசியான நாஞ்சில் இரச வடை தயார்!!
 12. இட்லி, ஆப்பம், இடியாப்பம், இவற்றுடன் உண்ண அருமையான சைட் டிஷ் இந்த நாஞ்சில் இரச வடை!! திருமணம், சடங்கு, பண்டிகை மற்றும் விசேஷ நாட்களில் நாஞ்சில் நகரின் விருந்து உபச்சாரங்களில்  தவறாமல் இடம்பெறுவது நாஞ்சில் இரச வடை!!!   குறிப்பாக தீபாவளி திருநாள் அன்று காலை சிற்றுண்டிக்கு எங்கள் வீட்டில் என் அம்மாவின் ஸ்பெஷல் மெனுவே இட்லி, நாஞ்சில் இரச வடை மற்றும் தேங்காய் சட்னி தாம்!!
 13. சிறுக்குறிப்பு :பொதுவாக இரவு படுக்கச் செல்லும் முன் வடைகளை இரசத்தில் ஊற வைத்து காலை சிற்றுண்டி சமயத்தில் சிறிது சூடாக்கி இரச வடையை உண்பது வழக்கம்.

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Saranya Manickam
Oct-27-2017
Saranya Manickam   Oct-27-2017

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்