வீடு / சமையல் குறிப்பு / நாஞ்சில் புளிக்கறி

Photo of Nanjil Tamarind Curry by Ayesha Ziana at BetterButter
848
4
0.0(0)
0

நாஞ்சில் புளிக்கறி

Oct-27-2017
Ayesha Ziana
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

நாஞ்சில் புளிக்கறி செய்முறை பற்றி

வெள்ளரிக்காய், கத்தரிக்காய் சேர்த்து செய்த நாகர்கோவில் ஸ்பெஷல் சைட் டிஷ் புளிக்கறி

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • தமிழ்நாடு
  • பாய்ளிங்
  • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. பொடியாக நறுக்கிய வெள்ளரிக்காய் 1 1/2 கப்
  2. பொடியாக நறுக்கிய கத்தரிக்காய் 1 1/2 கப்
  3. சின்ன வெங்காயம் 4
  4. பச்சை மிளகாய் 1
  5. புளி எலுமிச்சை அளவு
  6. இஞ்சி பூண்டு விழுது 1/3 ஸ்பூன்
  7. மிளகாய் தூள் 1/2 ஸ்பூன்
  8. மஞ்சள் தூள் 1/4 ஸ்பூன்
  9. பெருஞ்சீரகத்தூள் 1/2 ஸ்பூன்
  10. சீரகத்தூள் 1/3 ஸ்பூன்
  11. வெந்தயப்பொடி 1 ஸ்பூன்
  12. மல்லிப்பொடி(தேவைப்பட்டால்) 1/2ஸ்பூன்
  13. கரம் மசாலா(தேவைப்பட்டால்) 1/2 ஸ்பூன்
  14. தக்காளி(தேவைப்பட்டால்) 1/2
  15. உப்பு தேவைக்கு
  16. தண்ணீர் தேவைக்கு
  17. எண்ணெய் தேவைக்கு
  18. கடுகு 1 ஸ்பூன்
  19. கறிவேப்பிலை 1 கொத்து

வழிமுறைகள்

  1. ஒரு பாத்திரத்தில் வெள்ளரிக்காய், கத்தரிக்காய், சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு விழுது மற்றும் 2 மடங்கு தண்ணீர் சேர்த்து ஹை தீயில் 7-8 நிமிடம் மூடி வேக விடவும்.
  2. பின்னர், உப்பு மற்றும் ஊற வைத்த புளியைக் கரைத்து ஊற்றி மேலும் 2-3 நிமிடங்கள் ஹை தீயில் வேக வைக்கவும்.
  3. மிதமான தீயில், மசாலா பொடிகள் மற்றும் வெந்தய பொடி, அத்தனையும் சேர்த்து கிளறவும். மசாலா வாசனை போய், தண்ணீர் முழுவதும் வற்றி, காய்கறிகள் மிகவும் மென்மையாக ஆனதும் அடுப்பை அணைத்து விடவும்.
  4. மற்றொரு சின்ன பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி, கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, வேக வைத்த கலவையில் கொட்டி கிளறவும்.
  5. அருமையான நாகர்கோவில் ஸ்பெஷல் புளிக்கறி தயார். இது, சாதம், நாஞ்சில் மஞ்சச்சோறு இவற்றுடன் நான்வெஜ் சாப்பிடும்போது இசுலாமிய வீடுகளில் கட்டாயம் செய்வார்கள்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்