பருப்பு வடை | Paruppu vadai in Tamil

எழுதியவர் Safeena Safi  |  28th Oct 2017  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
  • Photo of Paruppu vadai by Safeena Safi at BetterButter
பருப்பு வடைSafeena Safi
  • ஆயத்த நேரம்

    20

    நிமிடங்கள்
  • சமைக்கும் நேரம்

    25

    நிமிடங்கள்
  • பரிமாறும் அளவு

    6

    மக்கள்

3

0

பருப்பு வடை recipe

பருப்பு வடை தேவையான பொருட்கள் ( Ingredients to make Paruppu vadai in Tamil )

  • பட்டானி பருப்பு -2கப்
  • சின்ன வெங்காயம்-10
  • பல்லாரி-1
  • பச்சை மிளகாய் -3
  • இஞ்சி-1 சின்ன துன்டு
  • வற்றல்-1
  • கருவேப்பிலை இலை- 1 கைப்பிடி
  • மல்லி இலை- தேவைக்கு
  • சீரகம், சோம்பு-1 ஸ்பூன்
  • பெருங்காயதூள்- 2சிட்டிகை
  • உப்பு- தேவைக்கு
  • எண்ணெய்- பொறிப்பதற்கு

பருப்பு வடை செய்வது எப்படி | How to make Paruppu vadai in Tamil

  1. பருப்பை 3-4 மணி நேரம் ஊற வைத்து பின்பு பருப்புடன் வற்றல் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து வைத்து கொள்ளவும்.
  2. வெங்காயம்,ப .மிளகாய், கருவேப்பிலை இலை, மல்லி இலை இவை அனைத்தையும் பொடியாக நறுக்கி கொள்ளவும். இஞ்சியை சீவிக் கொள்ளவும்.
  3. இவை அனைத்தையும் மாவுடன் சேர்த்து, சீரகம், சோம்பு உப்பு சேர்த்து பிசைந்து கொள்ளவும்வெங்காயம்,ப .மிளகாய், கருவேப்பிலை இலை, மல்லி இலை இவை அனைத்தையும் பொடியாக நறுக்கி கொள்ளவும்.
  4. இஞ்சியை சீவிக் கொள்ளவும். இவை அனைத்தையும் மாவுடன் சேர்த்து, சீரகம், சோம்பு உப்பு சேர்த்து பிசைந்து கொள்ளவும்.
  5. பின்பு ஒவ்வொரு உருன்டையாக எடுத்து வடை தட்டி வைத்து கொள்ளவும். பின்பு எண்ணெயை காய வைத்து வடையை பொறித்து எடுக்கவும். சூடாக சட்னியுடன் பரிமாறவும்.

எனது டிப்:

மிதமான சூட்டில் பொறிக்கவும். இஞ்சி சீரகம் சோம்பு சேர்வதால் செரிமானத்திற்கு நல்லது.

Reviews for Paruppu vadai in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.