வீடு / சமையல் குறிப்பு / மரவள்ளி கிழங்கு கறி

Photo of Tapioca Curry by Ayesha Ziana at BetterButter
1762
3
0.0(0)
0

மரவள்ளி கிழங்கு கறி

Oct-28-2017
Ayesha Ziana
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
35 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

மரவள்ளி கிழங்கு கறி செய்முறை பற்றி

கேரளா மற்றும் கன்னியாகுமரியின் மரச்சீனி(மரவள்ளி) கிழங்கு கறி வைத்தது.

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • தினமும்
  • கேரளா
  • பாய்ளிங்
  • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. மரவள்ளி கிழங்கு 1 மீடியம் சைஸ்
  2. துருவிய தேங்காய் 3 டேபிள் ஸ்பூன்
  3. மிளகாய் தூள் 1 ஸ்பூன்
  4. மஞ்சள் தூள் 1/2 ஸ்பூன்
  5. சீரகம் 1 ஸ்பூன்
  6. பூண்டு 4 பல்
  7. உப்பு தேவைக்கு
  8. தண்ணீர் தேவைக்கு
  9. கடுகு 1 ஸ்பூன்
  10. கறிவேப்பிலை 1 கொத்து
  11. எண்ணெய் தாளிக்க

வழிமுறைகள்

  1. மரவள்ளி கிழங்கை தோல் உரித்து, கழுவி, சிறு சிறு துண்டுகளாக வெட்டி, லேசாக உப்பு, நிறைய தண்ணீர் சேர்த்து நன்றாக வேக விடவும்.
  2. மிக்ஸியில் தேங்காய், மிளகாய் தூள், மஞ்சள் தூள், சீரகம், பூண்டு, சிறிது தண்ணீர் சேர்த்து கொஞ்சம் கொரகொரப்பாக அரைக்கவும்.
  3. கிழங்கு வெந்ததும் தண்ணீரை வடிகட்டி நன்றாக மசிக்கவும்.(புதிய கிழங்கு தான் நன்றாக மசிக்க வரும். சில கிழங்குகள் எவ்வளவு நேரம் வேக வைத்தாலும் மசிக்க முடியாது. எனவே கவனமாக வாங்கவும்.)
  4. பின்னர், அரைத்த மசாலா, சிறிது தண்ணீர், உப்பு சேர்த்து கிளறி மேலும் சில நிமிடங்கள் கொதிக்க விடவும். கறி இறுகியதும் அடுப்பை அணைத்து விடவும்.
  5. மற்றொரு பேனில் எண்ணெய் ஊற்றி, கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, கிழங்கில் கொட்டி கிண்டவும்.
  6. சுவையான மரச்சீனி(மரவள்ளி) கிழங்கு கறி தயார். இது கேரளா மற்றும் கன்னியாகுமரியின் அன்றாட மதிய சைட் டிஷ்களில் ஒன்று. இதனுடன் வறுத்தரைச்ச மீன் கறி, பொரித்த மீன் வைத்து சாதத்துடன் சாப்பிடுவார்கள்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்