வீடு / சமையல் குறிப்பு / முருங்கைப்பூ பொரியல்

Photo of Drumstick Flowers Poriyal by Saivardhini Badrinarayanan at BetterButter
861
3
0.0(0)
0

முருங்கைப்பூ பொரியல்

Oct-28-2017
Saivardhini Badrinarayanan
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

முருங்கைப்பூ பொரியல் செய்முறை பற்றி

வழக்கத்தில் மறந்துபோன ஒரு பொரியல் வகைகளில் ஒன்றான முருங்கைப்பூ பொரியல்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. முருங்கைப்பூ 1 கப்
  2. துவரம்பருப்பு 1/4 கப்
  3. தேங்காய் துருவல் 1/3 கப்
  4. பச்சைமிளகாய் 2
  5. கடுகு 1 மேஜைக்கரண்டி
  6. உளுத்தம்பருப்பு 1 மேஜைக்கரண்டி
  7. கருவேப்பிலை சிறிதளவு
  8. எண்ணெய் தாளிக்க
  9. எலுமிச்சை 1/2
  10. உப்பு
  11. கொத்துமல்லி இ்லை

வழிமுறைகள்

  1. முதலில் துவரம்பருப்பை, மஞ்சத்தூள் மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து 2 விசில் விட்டு வேகவைத்து கொள்ளவும்.
  2. முருங்கைப்பூவை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.
  3. பின் ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு , உளுத்தமப்பருப்பு, பச்சை மிளகாய், கருவேப்பிலை சேர்த்து நன்றாக பொறிஞ்சவுடன்.
  4. சுத்தம் செய்த முருங்கைப்பூ சேர்த்து நன்றாக பச்சை வாடை போகும் வரை வதக்கவும்.
  5. பின் சிறிதளவு தண்ணீர் சேர்த்து வேகவைக்கவும். பின் முருங்கைப்பூ வெந்தவுடன் உப்பு, வேகவைத்த துவரம்பருப்பு சேர்த்து வதக்கவும்.
  6. பின் தேங்காய் துருவல் சேர்த்து வதக்கவும். கடைசியில் அடுப்பிலிருந்து இறக்கியவுடன் எலுமிச்சை சாறு சேர்த்து கொத்துமல்லி தூவி பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்