வீடு / சமையல் குறிப்பு / மட்டன் எலும்பு சாம்பார்

Photo of Mutton Bone Sambar by Ayesha Ziana at BetterButter
1064
4
0.0(0)
0

மட்டன் எலும்பு சாம்பார்

Oct-29-2017
Ayesha Ziana
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

மட்டன் எலும்பு சாம்பார் செய்முறை பற்றி

மட்டன் எலும்புகளை வைத்து செய்யும் தமிழ்நாடு ஸ்டைல் சாம்பார்.

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • சிம்மெரிங்
  • பிரெஷர் குக்
  • அக்கம்பனிமென்ட்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. மட்டன் எலும்பு 500 கிராம்
  2. வெங்காயம் 1
  3. பூண்டு 15 பல்
  4. மஞ்சள் தூள் 1/3 ஸ்பூன்
  5. துவரம் பருப்பு ஒரு கையளவு
  6. பச்சை மிளகாய் 3 முதல் 6
  7. சாம்பார் பொடி 3 ஸ்பூன்
  8. உப்பு தேவைக்கு
  9. தண்ணீர் தேவைக்கு
  10. எண்ணெய் தாளிக்க
  11. கறிவேப்பிலை ஒரு கொத்து
  12. மல்லித்தழை சிறிது

வழிமுறைகள்

  1. மட்டன் எலும்பை மஞ்சள் தூள், உப்பு சேர்த்து குக்கரில் 8 விசில் வேக வைக்கவும்.
  2. துவரம் பருப்பையும் தனியாக குக்கரில் மூழ்கும் வரை தண்ணீர் ஊற்றி 3 விசில் வேக வைத்து, பின்னர் நன்றாக கடைந்து கொள்ளவும்.
  3. துவரம் பருப்புடன் நறுக்கிய பூண்டு, சாம்பார் பொடி, உப்பு, சேர்த்து கொதிக்க வைத்து, பின்னர் மட்டன் எலும்பு, தேவைக்கு தண்ணீர், இவற்றை சேர்க்கவும். மீண்டும் நன்றாக கொதிக்க விடவும்.
  4. மற்றொரு சிறிய பேனில் எண்ணெய் ஊற்றி, கறிவேப்பிலை, வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து தாளித்து, சிறிது நேரம் வதக்கி, இதையும் துவரம் பருப்பு கலவையுடன் கொட்டவும்.
  5. எல்லாம் சேர்ந்து சாம்பார் பதம் வந்ததும், மல்லித்தழை சேர்த்து அடுப்பை அணைத்து விடவும்.
  6. அருமையான தமிழ்நாடு ஸ்டைல் மட்டன் எலும்பு சாம்பார் தயார். இதை இட்லி, தோசை, ஆப்பத்துடன் சாப்பிடலாம்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்