BetterButter பயன்பாடு

சமையல், உணவு சமூகம் மற்றும் சமையலறைப் பொருட்கள்

(8,719)
பதிவிறக்கம் செய்திட

உங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்

வீடு / சமையல் குறிப்பு / தினை ஆப்பம்

Photo of Foxtail Millet(Thinai) Aappam by Ayesha Ziana at BetterButter
0
3
0(0)
0

தினை ஆப்பம்

Oct-29-2017
Ayesha Ziana
960 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

தினை ஆப்பம் செய்முறை பற்றி

பாரம்பரிய சிறுதானியங்களில் ஒன்றான தினையை வைத்து செய்த ஆப்பம்.

செய்முறை டாக்ஸ்

  • మీడియం/మధ్యస్థ
  • ప్రతి రోజు
  • తమిళనాడు
  • అల్పాహారం మరియు బ్రంచ్
  • పౌష్టికాహారం

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. தினை 1 கப்
  2. புழுங்கல் அரிசி 1/8 கப்
  3. வெள்ளை உளுந்து 1 டேபிள் ஸ்பூன்
  4. வெந்தயம் 1/2 ஸ்பூன்
  5. துருவிய தேங்காய் 1/4 கப்
  6. வடித்த சாதம் 1/2 கையளவு
  7. உப்பு தேவைக்கு
  8. சர்க்கரை 1 ஸ்பூன்
  9. கஞ்சி காய்ச்ச: பச்சரிசி 1 ஸ்பூன்(தனியே ஊற வைக்கவும்)

வழிமுறைகள்

  1. தினை, புழுங்கல் அரிசி, வெள்ளை உளுந்து, வெந்தயம், இவற்றை 4 மணி நேரம் சேர்த்து ஊற வைத்து அரைக்கவும். பின்னர், அதனுடன் தேங்காய் மற்றும் சாதம் சேர்த்து மீண்டும் அரைக்கவும்.
  2. கஞ்சி காய்ச்ச: பச்சரிசியைத் தனியே அரைத்து, மோர் பதத்திற்கு தண்ணீர் சேர்த்து, அடுப்பில் வைத்து விடாமல் கிளறி, பசை போன்று வந்ததும் இறக்கி ஆற வைத்து, ஏற்கனவே அரைத்த மாவுடன் இதையும் கலந்து, உப்பும் சேர்த்து கலந்து ஒரு இரவு புளிக்க விடவும்.
  3. மறுநாள் காலை சர்க்கரை சேர்த்து கலந்து, ஆப்பச்சட்டியில் மாவு ஊற்றி ஆப்பமாகச் சுடவும். சுவையான, சத்தான, பாரம்பரியமான தினை சிறுதானியத்தில் செய்த ஆப்பம் தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்