வீடு / சமையல் குறிப்பு / மருந்து சோறு

Photo of Marunthu choru by Asiya Omar at BetterButter
215
4
0.0(0)
0

மருந்து சோறு

Oct-30-2017
Asiya Omar
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

மருந்து சோறு செய்முறை பற்றி

இஸ்லாமிய இல்லங்களில் பாரம்பரியமாகச் செய்யக்கூடிய சாப்பாடு.இதற்கு மஞ்சள்,சாளியா,சதகுப்பை,கருவாபட்டை,கசகசா,வெந்தயம்,உளுந்து சேர்த்து செய்யும் பொடி உபயோகிப்பார்கள்.

செய்முறை டாக்ஸ்

 • கடினம்
 • தமிழ்நாடு
 • மெயின் டிஷ்
 • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

 1. புழுங்கல் அரிசி அல்லது பச்சைஅரிசி-1/2 கிலோ
 2. மருந்து பொடி - 2 டேபிள்ஸ்பூன்
 3. இஞ்சி பூண்டு பேஸ்ட் - 4 டீஸ்பூன்
 4. ஏலம்பட்டைகிராம்புத்தூள் - 1/2 டீஸ்பூன்
 5. நாட்டு பூண்டு பற்கள் - 15
 6. மல்லி புதினா கருவேப்பிலை - சிறிது
 7. நல்லெண்ணெய் - 100 மில்லி
 8. நெய் - 2 டேபிள்ஸ்பூன்
 9. வெங்காயம் -100 கிராம்
 10. பச்சை மிளகாய -3
 11. தேங்காய்ப்பால்-பாதி பெரிய காயில் எடுத்தது
 12. கருப்பட்டி - 50 கிராம்
 13. உளுந்தம்பருப்பு - ஒரு கைபிடியளவு
 14. முட்டை-1
 15. உப்பு - தேவைக்கு.

வழிமுறைகள்

 1. மருந்து பொடி என்பது மஞ்சள், சாளியை,சதகுப்பை,கருவாபட்டை, கசகசா,வெந்தயம் சேர்த்து திரித்து வைப்பது. மருந்து பொடியில் 2 டேபிள்ஸ்பூன் எடுத்து ஒரு கிண்ணத்தில் ஒரு கப் நீரில் கரைத்து வைக்கவும்.வழுவழுப்பாக இருக்கும். அரிசியை அலசி ஊற வைக்கவும்.. உளுந்தையும் அலசி ஊற வைக்கவும்.
 2. அடிகனமான பாத்திரத்தில் எண்ணெய் நெய் விடவும்.நறுக்கிய வெங்காயம் வதக்கி,இஞ்சி பூண்டு பேஸ்ட்,கரம் மசாலா சேர்க்கவும் அத்துடன் உரித்த பூண்டை சேர்க்கவும். மல்லி புதினா கருவேப்பிலை சிறிது சேர்த்து வதக்கவும்.
 3. பின்பு கரைத்து வைத்த மருந்து பொடியை சேர்த்து அடுப்பை சிம்மில் வைத்து மூடி சிறிது வேக விடவும்.எண்ணெய் பிரிந்து வரும்
 4. பச்சை மிளகாய் சேர்க்கவும்.தேங்காய்ப்பால்,தண்ணீர் கலவை அரிசியின் அளவிற்கு 1:2 என்ற விகிதத்தில் உப்பு தேவைக்கு சேர்க்கவும்..
 5. கொதி வரும் பொழுது அரிசி,உளுந்தை சேர்க்கவும்.விரும்பினால் உளுந்தை தனியாக வேக வைத்தும் சோறு வெந்து மேலே வரும் பொழுதும் சேர்க்கலாம்.நான் அரிசி உளுந்து ஒன்றாகவே ஊறவிட்டு சேர்த்து விடுவேன்.
 6. கருப்பட்டி பாகு எடுத்து வடிகட்டி வைக்கவும். முட்டையை அடித்து வைக்கவும்.
 7. சோறு வெந்து மேலே தண்ணீர் எல்லாம் வற்றி வரும். அப்பொழுது கருப்பட்டி பாகு சேர்க்கவும். முட்டையை ஆங்காங்கு கொடி போல் ஊற்றவும்.பிரட்டி விடவும்.
 8. அடி பிடிக்காத்கவாற மூடி போட்டு சிம்மில் தம் 10 நிமிடம் போடவும்.
 9. திறந்து பிரட்டி விட்டு பரிமாறவும். சுவையான சத்தான மருந்து சோறு தயார்.
 10. இதனை மட்டன் சால்னா அல்லது விறால் மீன் குழம்பு பொரித்த மீன்,தால்ச்சா,அவித்த முட்டை,சுருட்டு கறி இவற்றுடன் பரிமாறலாம். உடல்நலத்திற்கு மிகவும் நல்லது. குழந்தை பெற்றவர்களுக்கு இந்த மருந்து பொடியை தான் உபயோகித்த சோறு காயம், களி,லேகியம் செய்து கொடுப்பார்கள்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்