வீடு / சமையல் குறிப்பு / எண்ணெய் கத்தரிக்காய்

Photo of Ennai kathirikai by Safeena Safi at BetterButter
369
6
0.0(0)
0

எண்ணெய் கத்தரிக்காய்

Oct-30-2017
Safeena Safi
25 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
45 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

எண்ணெய் கத்தரிக்காய் செய்முறை பற்றி

பிரியானிக்கு ஏற்ற சைட் டிஷ்

செய்முறை டாக்ஸ்

 • வெஜ்
 • மீடியம்
 • ஈத்
 • தமிழ்நாடு
 • ஃபிரையிங்
 • ஸாட்டிங்
 • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

 1. கத்திரிக்காய் -1/4 கி (சிறியதாக)
 2. சின்ன வெங்காயம் -15
 3. பல்லாரி - 3(சிறிதாக நறுக்கியது)
 4. தக்காளி - 4
 5. மிளகு - 3ஸ்பூன்
 6. வத்தல் தூள் - காரத்திற்கேற்ப
 7. மஞ்சள் தூள் -1 ஸ்பூன்
 8. நல்லெண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்
 9. எள்ளு - 4-5 ஸ்பூன்
 10. புலி- எலுமிச்சை அளவு ( சாறு பிழிந்து வைக்கவும்)
 11. வேர் கடலை - 1 கைப்பிடி
 12. உப்பு - தேவைக்கு

வழிமுறைகள்

 1. முதலில் கத்திரிக்காயை காம்புடன் எடுத்து நான்காக அடி பாகத்தில் பாதி அளவு கீறிக் கொள்ளவும். தண்ணீரில் போட்டு அலசி எடுக்கவும். பின்னர் ஒரு பாத்திரத்தை காய வைத்து எண்ணெய் ஊற்றவும். எண்ணெய் காய்ந்ததும் கத்திரிக்காயை பொறித்து எடுக்கவும்.
 2. பின்பு அதே எண்ணெயில் மிளகு போடவும். மிளகு வெடித்ததும் நறுக்கிய பள்ளாரி, நறுக்கிய 2 தக்காளி, உப்பு, மஞ்சள் தூள், வத்தல் தூள் சேர்த்து வதங்க விடவும். சின்ன வெங்காயம் மற்றும் 2 தக்காளி சேர்த்து அரைத்து கொள்ளவும். அரைத்த விழுதையும் சேர்த்து வதக்கவும்.
 3. பின்பு புளி தண்ணீர் சேர்க்கவும். 10 நிமிடம் கழித்து பொறித்த கத்திரிக்காய் சேர்த்து சிம்மில் வைத்து கொள்ளவும்
 4. மற்றொரு பாத்திரத்தை சூடாக்கி எள்ளு மற்றும் கடலை சேர்த்து மணம் வரும் வரை வறுத்து அதை தண்ணீ்ர் சேர்த்து அரைத்துக்கொள்ளவும்.
 5. பின் விழுதைசேர்க்கவும். எண்ணெய் பிரிந்து தனியாக வந்தவுடன் அடுப்பை அணைத்து விடவும். பிரியானி, நெய் சோறு ஆகியவற்றுடன் சேர்த்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்