வீடு / சமையல் குறிப்பு / நெல்லை கூட்டாஞ்சோறு

Photo of Nellai Kootanchoru by Asiya Omar at BetterButter
57
6
0.0(0)
0

நெல்லை கூட்டாஞ்சோறு

Oct-31-2017
Asiya Omar
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

நெல்லை கூட்டாஞ்சோறு செய்முறை பற்றி

நெல்லையின் பிரசித்தி பெற்ற பாரம்பரிய உணவு.அரிசி,பருப்பு,காய்கறிகள் சேர்த்து ஒரே பானையில மக்கள் கூடி ஒன்று சேர்ந்து சமைப்பது.

செய்முறை டாக்ஸ்

 • வெஜ்
 • மீடியம்
 • தினமும்
 • தமிழ்நாடு
 • மெயின் டிஷ்
 • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

 1. புழுங்கல் அரிசி - 200 கிராம்
 2. துவரம்பருப்பு-50 கிராம்
 3. மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்
 4. காய்கறிகள கலவை- கால் கிலோ
 5. முருங்கைகீரை -ஒரு கப்
 6. உப்பு - தேவைக்கு.
 7. அரைத்த மசாலாவிற்கு:-
 8. தேங்காய்த்துருவல் - கால் கப்
 9. சீரகம் -1 டீஸ்பூன்
 10. மிளகாய் வற்றல் - 3 -4
 11. சின்ன வெங்காயம் -10
 12. தாளிக்க:-
 13. எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
 14. கடுகு,உ.பருப்பு - தலா 1 டீஸ்பூன்
 15. கருவேப்பிலை -2 இணுக்கு
 16. வடகம்.உடைத்தது -1
 17. பெருங்காயம் - கால் டீஸ்பூன்
 18. சோறு மேல் விட நெய் -2 டீஸ்பூன்

வழிமுறைகள்

 1. முதலில் அரிசி பருப்பை களைந்து நான்கு கப் தண்ணீரில் அரை மணி நேரம் ஊற வைக்கவும்ம்
 2. காய்கறிகள் கத்திரிக்காய் -4,முருங்கைக்காய் -1,கேரட் -1,அவரைக்காய் 5,வாழைக்காய்-1,மாங்காய்-1 நறுக்கி எடுக்கவும்.
 3. மேற்சொன்ன மசாலா சாமானை தண்ணீர் சேர்த்து அரைக்கவும்.புளி கரைத்து வைக்கவும்
 4. அடுப்பை பற்ற வைக்கவும.அரிசி பருப்பை தேவைக்கு தண்ணீர் சேர்த்து பானையில் அல்லது குக்கரில் போட்டு வேகவைக்கவும்.
 5. அடுத்து ஒரு வாணலியில் ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு காய்கறிகள்,மஞ்சள் தூள் சேர்த்து பிரட்டவும்.கீரை சேர்த்து வதக்கவும்.அரைத்த மசால் சேர்த்து தண்ணீர் சிறிது சேர்த்து வேக வைக்கவும்.
 6. காய் வெந்ததும் புளித்தண்ணீர் சேர்க்கவும்.ஒன்று சேர்ந்து கொதிக்கட்டும்.
 7. சோறு பருப்பும் வெந்து வரும்.அதில் வெந்த காய்கறிகளைச் சேர்க்கவும்.
 8. ஒரு சேர பிரட்டி விடவும். நன்கு வெந்து இருக்க வேண்டும் குழைவாகவும் இல்லாமல் ஒன்றொன்றாகவும் இல்லாமல் பக்குவமாக இருக்க வேண்டும்.
 9. தாளிக்க கடாயில் எண்ணெய் விட்டு கடுகு ,உ.பருப்பு,கருவேப்பிலை,வெடிக்க விட்டு வடகம் பொடித்து போட்டு, பெருங்காயம் பொடி சேர்க்கவும்.தாளித்ததை கூட்டாஞ்சோறுவில் சேர்க்கவும் நெய் மேலே போடவும்.
 10. மணக்க மணக்க நெல்லையின் பாரம்பரிய கூட்டாஞ்சோறு தயார்.பொரித்த அப்பளம்,வடகம்,வற்றலுடன் பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்