வீடு / சமையல் குறிப்பு / சுசியம்/ சுகியன்

Photo of Susiyam - Sweet fried dumplings by Janaki Priya at BetterButter
1058
3
0.0(0)
0

சுசியம்/ சுகியன்

Oct-31-2017
Janaki Priya
40 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

சுசியம்/ சுகியன் செய்முறை பற்றி

நாஞ்சில் நகரில் ஒணம் மற்றும் நவராத்திரி போன்ற பண்டிகை மற்றும் விழா நாட்களில் தவறாமல் இடம்பெறும் பண்டம் சுசியம்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • பண்டிகை காலம்
  • சௌத்இந்தியன்
  • ஃபிரையிங்
  • டெஸர்ட்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. கடலைப்பருப்பு - 1 கப்
  2. வெல்லம் -3/4 கப்
  3. துருவிய தேங்காய் -1/4 கப்
  4. சுக்குப்பொடி - 1/2 தேக்கரண்டி
  5. ஏலக்காய் தூள் -1/2 தேக்கரண்டி
  6. மைதா மாவு - 3/4 கப்
  7. தண்ணீர் - தேவையான அளவு
  8. எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு

வழிமுறைகள்

  1. கடலைபருப்பை நன்கு சுத்தம் செய்து 1/2 மணிநேரம் வரை தண்ணீரில் ஊற வைக்கவும்.
  2. குக்கரில் கடலைபருப்பை 2 விசில் வரும் வரை வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
  3. சூடான வாணலியில் சிறிது நெய் விட்டு தேங்காய் துருவலை மிதமான சூட்டில் வறுத்து எடுத்து வைத்து கொள்ளவும்.
  4. அதே வாணலியில்,  பொடி செய்த  வெல்லத்தை சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு, வெல்லம் உருகி கரையும் வரை கிளறவும்.
  5. வெல்லம் நன்கு உருகி சிறிது பாகு பதம் வந்தவுடன், அதனுடன் வேக வைத்த  கடலைபருப்பு மற்றும் தேங்காய் துருவலை சேர்த்து நன்கு கலந்து விடவும்.
  6. வெல்லப்பாகில் கடலைபருப்பு மற்றும் தேங்காய் துருவல் நன்கு கலந்து வரும் வரை வேக விடவும்.
  7. பின் இதனுடன் சுக்கு பொடி மற்றும் ஏலக்காய் தூள் சேர்த்து கிளறவும்
  8. பூரணம் நன்கு உருண்டு வரும் பதத்தில் இறக்கி விடவும். சுசியம் /சுகியன்  செய்வதற்கு தேவையான பூரணம் தயார்.
  9. மைதா மாவில் சிறிது தண்ணீர் சேர்த்து ஊற்றும் பதத்தில் மாவாகக் கலந்து கொள்ளவும்.
  10. பூரணம் ஆறிய பின் சிறிய சிறிய  உருண்டைகளாக உருட்டி தட்டில் வைத்து கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு  காய வைக்கவும்.
  11. பூரண உருண்டைகளை மைதா மாவு கலவையில் இட்டு, நன்கு மூடும் வரை பிரட்டிய பின், சூடான எண்ணெயில் இட்டு பொரித்து எடுக்கவும்.
  12. ருசியான சுசியம் தயார்!! நாஞ்சில் நகரில் ஒணம் மற்றும் நவராத்திரி போன்ற விழாக்களில் தவறாமல் இடம்பெறும் பண்டம் சுசியம்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்