வீடு / சமையல் குறிப்பு / நீத்தண்ணிச் சோறு

Photo of Cooked rice with leftover rice porridge water by Natchiyar Sivasailam at BetterButter
861
3
0.0(0)
0

நீத்தண்ணிச் சோறு

Oct-31-2017
Natchiyar Sivasailam
2880 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

நீத்தண்ணிச் சோறு செய்முறை பற்றி

நீராகாரம், நீத்தண்ணி, நீச்சத்தண்ணி என்று சொல்லப்படும் நீராகாரம் மிகவும் சத்தும் சுவையும் மிகுந்தது. நீத்தண்ணி என்று சொல்வது எங்கள் பாரம்பரிய வழக்கம். கைக்குத்தல் அரிசியை நீத்தண்ணியைக் கொண்டு சமைக்கும் சோறு தான் நீத்தண்ணிச் சோறு. இன்றைய தலைமுறையினருக்கு இது மிகவும் புதுமையாக இருக்கும்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பாய்ளிங்
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. கைக்குத்தல் அரிசி 1 கப்
  2. நீத்தண்ணி 4 கப்
  3. உப்பு தேவையான அளவு
  4. நீத்தண்ணி தயாரிக்க
  5. கைக்குத்தல் அரிசி 1 கப்
  6. தண்ணீர் 6 கப்

வழிமுறைகள்

  1. இரண்டு நாட்களுக்கு முன் செய்ய வேண்டியது
  2. பாத்திரத்தில் ஆறு கப் தண்ணீர் கொதிக்க வைத்து கொதித்ததும் சுத்தம் செய்த கைக்குத்தல் அரிசி சேர்த்து வேகவிடவும்.
  3. சோறு வெந்ததும் கஞ்சியை பத்திரமாக மூடி வைக்கவும்.
  4. சோறு நன்றாக ஆறியதும் கஞ்சியும் தண்ணீரும் சேர்த்து ஊற்றி மூடி வைக்கவும்.
  5. நீத்தண்ணி புளித்தால் தான் சோறு ருசியாக இருக்கும்.
  6. அதனால் இரண்டு நாட்கள் சோற்றை வைத்திருக்கவும்.
  7. இரண்டு நாட்கள் கழித்து சோற்றை வடித்து நீத்தண்ணி 4 கப் எடுத்துக் கொள்ளவும்.
  8. நீத்தண்ணிச் சோறு தயாரிக்க
  9. மண்சட்டியில் 4 கப் நீத்தண்ணி ஊற்றிக் கொதிக்க விடவும்.
  10. நீத்தண்ணி கொதித்ததும் ஒரு கப் கைக்குத்தல் அரிசியைக் கழுவி அதில் சேர்க்கவும்.
  11. சோறு கொதித்ததும் அடுப்பை சிம்மில் வைத்துக் கொள்ளவும்.
  12. சோறு முக்கால்வாசி வெந்ததும் தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும்.
  13. சோறு வெந்ததும் அடுப்பை அணைத்து மண்சட்டியை இறக்கி வைக்கவும்.
  14. மண்சட்டியில் அதிக நேரம் சூடு நிற்கும். அதனால் அடுப்பை அணைத்து சட்டியை இறக்கி மூடி வைத்தால் அந்த சூட்டிலேயே சோறு குழைந்து விடும்.
  15. ஐந்து நிமிடம் கழித்து சோற்றைப் பரிமாறவும்.
  16. நீத்தண்ணிச் சோறு புளிப்புச் சுவையுடன் இருக்கும். அதனால் புளிப்பு குறைவாக உள்ள சாம்பார், புளி இல்லாத துவையல் சேர்த்து சாப்பிடலாம்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்