வீடு / சமையல் குறிப்பு / எலும்பு ஈரல் சூப்

Photo of Mutton bone lungs soup by Asiya Omar at BetterButter
2015
5
0.0(0)
0

எலும்பு ஈரல் சூப்

Nov-01-2017
Asiya Omar
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

எலும்பு ஈரல் சூப் செய்முறை பற்றி

எலும்பு,ஈரல் சேர்த்து சூப் செய்து சாப்பிடுவது உடல் பலம் பெறும்.வாரம் ஒரு முறை செய்து சாப்பிடலாம்.

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • மீடியம்
  • தமிழ்நாடு
  • பிரெஷர் குக்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. ஆட்டு எலும்பு -250 கிராம்
  2. நுரைஈரல்-100 கிராம்
  3. மசால் அரைக்க:-
  4. மிளகுத்தூள் - 2 -3 டீஸ்பூன்
  5. மல்லித்தூள் -4 டீஸ்பூன்
  6. சீரகத்தூள்-1 டீஸ்பூன்
  7. மஞ்சள் தூள் - அரை- 1டீஸ்பூன்
  8. (காரம் அவரவர் விருப்பம்,மசால் அளவு வேறுபடலாம்)
  9. நாட்டு பூண்டு பற்கள் -15
  10. தேங்காய்த்துருவல் - 2-3 டேபிள்ஸ்பூன்
  11. முந்திரிபருப்பு - 4
  12. சின்ன வெங்காயம் -10
  13. தக்காளி -1
  14. உப்பு - தேவைக்கு.
  15. தாளிக்க:-
  16. நல்ல எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
  17. நறுக்கிய சின்ன வெங்காயம் - சிறிது
  18. கறிவேப்பிலை-2 இணுக்கு
  19. மல்லி இலை நறுக்கியது சிறிது.

வழிமுறைகள்

  1. எலும்பு ஈரல் நன்கு அலசி தண்ணீர் வடிகட்டவும்.
  2. குக்கரில் அரைத்த மசால் ,எலும்பு ஈரல் மூழ்கும் அளவு தண்ணீர் சேர்த்து மூடி கொதி வரவும், முதல் விசில் வந்து அடுப்பைக் குறைத்து 15 நிமிடம் வைக்கவும்.
  3. ஆவியடங்கியவுடன் திறக்கவும். எலும்பு ஈரல் வெந்து இப்படி காணப்படும்.சுவை சூப்பராக இருக்கும்.
  4. தாளிக்க நல்ல எண்ணெய் நறுக்கிய சின்ன வெங்காயம் சிறிது கறிவேப்பிலை சேர்த்து சிவற வதக்கி சூப் மேல் கொட்டவும்.நறுக்கிய மல்லி இலை சேர்க்கவும்.
  5. வெறுஞ்சோறு,சப்பாத்தி,இட்லி,தோசை, இடியாப்பத்துடன் பரிமாறலாம்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்