வீடு / சமையல் குறிப்பு / நாஞ்சில் கணவாய் வாழைக்காய் துவரன்

Photo of Nanjil Squid RawBanana Thoran by Ayesha Ziana at BetterButter
879
3
0.0(0)
0

நாஞ்சில் கணவாய் வாழைக்காய் துவரன்

Nov-02-2017
Ayesha Ziana
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

நாஞ்சில் கணவாய் வாழைக்காய் துவரன் செய்முறை பற்றி

நாகர்கோவில் ஸ்பெஷல் கணவாய் மீன் மற்றும் வாழைக்காய் சேர்த்து செய்யும் துவரன்.

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஸ்டிர் ஃபிரை
  • பாய்ளிங்
  • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. கணவாய் மீன் சிறியது 5 அல்லது 6
  2. வாழைக்காய் 1
  3. சின்ன வெங்காயம் 4
  4. பச்சை மிளகாய் 1
  5. தேங்காய் 1/2 கப்
  6. மிளகாய் தூள் 3/4 ஸ்பூன்
  7. மஞ்சள் தூள் 1/3 ஸ்பூன்
  8. சீரகம் 3/4 ஸ்பூன்
  9. பூண்டு 4 பல்
  10. உப்பு தேவைக்கு
  11. எண்ணெய் தாளிக்க
  12. கடுகு 1 ஸ்பூன்
  13. கறிவேப்பிலை

வழிமுறைகள்

  1. பொடியாக நறுக்கிய கணவாய் மீனை தண்ணீரில் 5 நிமிடம் கொதிக்க வைத்து வடிகட்டி கொள்ளவும். வாழைக்காயை தண்ணீரில் பொடியாக நறுக்கி வைத்து கொள்ளவும்.
  2. வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, பின்னர் நறுக்கிய வாழைக்காய், நறுக்கிய சின்ன வெங்காயம், கீறிய பச்சை மிளகாய் சேர்த்து லேசாக வதக்கி, சிறிது தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து வேக விடவும்.
  3. வாழைக்காய் சிறிது வெந்ததும் நறுக்கிய கணவாய் மீனையும் சேர்த்து சிம்மில் 2 நிமிடம் வேக விடவும்.
  4. மிக்ஸியில் துருவிய தேங்காய், மிளகாய் தூள், மஞ்சள் தூள், சீரகம், பூண்டு, சிறிது தண்ணீர் சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும். இதையும் வாணலியில் சேர்த்து கிளறி, தண்ணீர் முழுவதும் வற்றியதும் அடுப்பை அணைத்து விடவும்.
  5. சாதத்துடன் பரிமாறவும். மிகவும் சுவையான நாகர்கோவில் கணவாய் வாழைக்காய் துவரன் தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்