ரவா இட்லி | Rava Idli in Tamil

எழுதியவர் Bindiya Sharma  |  23rd Jul 2015  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
  • Photo of Rava Idli by Bindiya Sharma at BetterButter
ரவா இட்லிBindiya Sharma
  • ஆயத்த நேரம்

    0

    நிமிடங்கள்
  • சமைக்கும் நேரம்

    10

    நிமிடங்கள்
  • பரிமாறும் அளவு

    4

    மக்கள்

3676

0

Video for key ingredients

  • Sambhar Powder

  • How to make Idli/Dosa Batter

ரவா இட்லி recipe

ரவா இட்லி தேவையான பொருட்கள் ( Ingredients to make Rava Idli in Tamil )

  • 1 1/2 கப் ரவை
  • 1 1/2 கப் தயிர்
  • 1/2 தேக்கரண்டி சோடியம் பைகார்பனேட்
  • 1/4 கப் தண்ணீர்
  • 1 தேக்கரண்டி எண்ணெய்
  • 1 தேக்கரண்டி உங்கள் விருப்பத்திற்கேற்ப வறுத்த முந்திரிபருப்பு/வேர்கடலை
  • 2 தேக்கரண்டி நறுக்கிய கொத்துமல்லி இலைகள்
  • சுவைக்கேற்ற உப்பு
  • 1/4 தேக்கரண் டி பொடியாக நறுக்கிய இஞ்சிய

ரவா இட்லி செய்வது எப்படி | How to make Rava Idli in Tamil

  1. ஒரு பெரிய பாத்திரத்தை எடுத்து தயிர் சேர்த்து 7-8 நிமிடங்கள் கடைந்துகொள்ளவும். இப்போது ரவையை அதனோடு சேர்த்து நன்றாகக் கலந்துகொள்ளவும்.
  2. தொடர்ந்து கலக்கிக்கொண்டே மெதுவாக தண்ணீர் உப்பு சேர்க்கவும். நன்றாகக் கலந்து 15-20 நிமிடங்கள் எடுத்து வைக்கவும்.
  3. இப்போது கொத்துமல்லி, இஞ்சி, முந்திரிபருப்பு/வேர்கடலை, சோடியம் பைகார்பனேட் சோடா ஆகியவற்றைச் சேர்த்து சற்றே கலந்துகொள்க.
  4. இட்லி குழிகளில் கொஞ்சம் எண்ணெய் தடவி, ஒரு கரண்டி அல்லது அந்தளவிற்கு இட்லி மாவை ஊற்றி இட்லி குண்டானை பாய்லரில்/குக்கரில் வைக்கவும்.
  5. மூடியிட்டு மூடி 10-12 நிமிடங்கள் வேகவைக்கவும். பிரஷர் குக்கர் பயன்படுத்தினால் விசில் இல்லாமல் அதே நேரத்திற்கு வேகவைக்கவும். சூடான இட்லிகளை சாம்பார் அல்லது தேங்காய் சட்னியோடு பரிமாறவும்.

Reviews for Rava Idli in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.