வீடு / சமையல் குறிப்பு / பருப்பு துவையலும் மருந்து ரசமும்

Photo of Paruppu thuvayal and marundu rasam by Krishnasamy Vidya Valli at BetterButter
626
3
0.0(0)
0

பருப்பு துவையலும் மருந்து ரசமும்

Nov-03-2017
Krishnasamy Vidya Valli
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

பருப்பு துவையலும் மருந்து ரசமும் செய்முறை பற்றி

எண்ணெய் குளியலன்று செய்யப்படும் துவையல் மற்றும் ரசம் உடம்பிற்கு மிகவும் நல்லது உடல் வலி சளி இருமல் இருக்கும் போதும் செய்வார்கள்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. மருந்து ரசத்திற்கு தேவையானவை :
  2. கண்டன் திப்பிலி - ஒரு விரல் நீளத்திற்கு இருக்கும் பட்சத்தில் 6 முதல் 8 இரண்டு மூன்றாக ஒடித்து கொள்ளவும்
  3. அரிசி திப்பிலி - 6 முதல் 8
  4. மிளகாய் வத்தல் - 2
  5. துவரம்பருப்பு - 2 தேக்கரண்டி
  6. மிளகு - 1 தேக்கரண்டி
  7. சீரகம் - 1 தேக்கரண்டி
  8. கட்டி பெருங்காயம் - 1 சிறிய துண்டு
  9. கருவேப்பிலை - 2 ஆர்க்கு
  10. நெய் - 2 தேக்கரண்டி
  11. தாளிக்க : கடுகு - 1 தேக்கரண்டி சீரகம் - 1 தேக்கரண்டி கறிவேப்பிலை - 2 ஆர்க்கு மிளகாய் வத்தல் - 2
  12. புளி - சிறிய எலுமிச்சை அளவு
  13. உப்பு - 1 3/4 தேக்கரண்டி
  14. வெல்லம் - 1 சிறிய துண்டு
  15. மஞ்சள் பொடி - 1 தேக்கரண்டி
  16. பருப்பு துவையலுக்கு தேவையானவை
  17. பாசிப்பருப்பு - 1 / 2 cup
  18. துவரம்பருப்பு - 1 / 2 cup
  19. தேங்காய் துருவல் - 1 / 2 cup
  20. மிளகு - 1 / 2 தேக்கரண்டி
  21. மிளகாய் வத்தல் - 1
  22. பெருங்காயம் - 1 சிட்டிகை
  23. உப்பு - 1 தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. ஒரு தேக்கரண்டி நெய்யில் கண்டன் திப்பிலி அரிசி திப்பிலி துவரம்பருப்பு மிளகு சீரகம் மிளகாய் வத்தல் பெருங்காயம் கருவேப்பிலை தனித்தனியே வறுத்து க்கொள்ளவும்
  2. மிக்ஸியில் தண்ணீர் விட்டு அரைக்கவோ அல்லது dryஆக திரிக்கவோ செய்யவும்
  3. புளி கரைத்து உப்பு மஞ்சள் பொடி சேர்த்து கொதிக்கவிடவும்
  4. அரைத்த விழுதை சேர்த்து நுரைக்க விடவும்.தேவைப்பட்டால் தண்ணீர் சேர்த்து விளாவிக்கொள்ளவும் .ரசம் எப்போதுமே தளதளவென கொதிக்கவிடக்கூடாது. நுரைத்து பொங்கும் போது இறக்கி விடவும்
  5. ஒரு தேக்கரண்டி நெய்யில் கடுகு சீரகம் கருவேப்பிலை மிளகாய் வத்தல் சேர்த்து தாளித்து சேர்த்தால் அருமையான மருந்து ரசம் தயார்
  6. பாசிப்பருப்பு துவரம்பருப்பு மிளகு மிளகாய் வத்தல் பெருங்காயம் சேர்த்து நன்றாக வறுத்துக்கொள்ளவும்
  7. வறுத்ததை தேங்காய் துருவல் உப்பு சேர்த்து அரைத்தால் பருப்பு துவையல் ரெடி. நைஸாக தண்ணீர் விட்டு அரைக்கலாம் அல்லது தண்ணீர் தெளித்து உதிர்உதிராக வும் அரைக்கலாம்
  8. பாரம்பரிய முறைப்படி செய்யும்போது கொத்தமல்லி இலை மற்றும் விதை தக்காளி சேர்ப்பது இல்லை . விருப்பப்பட்டால் சேர்க்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்