வீடு / சமையல் குறிப்பு / கேரளா நெய் அப்பம்

Photo of Kerala Nei Appam - Sweetened rice flour dumplings cooked in ghee by Janaki Priya at BetterButter
1147
5
0.0(0)
0

கேரளா நெய் அப்பம்

Nov-03-2017
Janaki Priya
200 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

கேரளா நெய் அப்பம் செய்முறை பற்றி

கேரளா மற்றும் நாஞ்சில் நகரில் பண்டிகை மற்றும் விசேஷ நாட்களில் தவறாமல் இடம்பெறும் இனிப்பு இந்த நெய் அப்பம்!! குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமானது. உண்பதற்கு மிகவும் ருசியானதும் மென்மையானதும் கூட....

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • கேரளா
  • ஷாலோ ஃபிரை
  • டெஸர்ட்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. பச்சரிசி - 1 கப்
  2. பொடித்த வெல்லம் - 1/2 கப்
  3. கனிந்ந வாழைப்பழம் -2
  4. துருவிய தேங்காய் -1/4 கப்
  5. நெய் - பொரிக்க தேவையான அளவு
  6. சுக்குப்பொடி - 1/2 தேக்கரண்டி
  7. ஏலக்காய்தூள் - 1/2 தேக்கரண்டி
  8. சமையல் சோடா உப்பு - 1 சிட்டிகை

வழிமுறைகள்

  1. பச்சரிசியை நன்கு சுத்தம் செய்து 2-4 மணி நேரம் வரை தண்ணீரில் ஊற வைக்கவும் .
  2. பச்சரிசியை வடிகட்டி, பின் மிக்ஸியில் சிறிது தண்ணீர் மட்டும் சேர்த்து சிறிது கெட்டியான மாவாக அரைத்து கொள்ளவும்.
  3. பின் சூடான வாணலியில் பொடித்த வெல்லத்துடன் சிறிது தண்ணீர் சேர்த்து  கொதிக்க விடவும்.
  4. வெல்லம் நன்கு கரைந்த பின்பு தீயை அணைத்து விடவும். பின் வெல்ல நீரை வடிகட்டி அரைத்து வைத்துள்ள மாவுடன் சிறிது சிறிதாக கலந்து சிறிது கெட்டியாக  ஊற்றும் பதத்தில் தயார் செய்து கொள்ளவும்.
  5. அதனுடன் கனிந்த வாழைப்பழங்களை நன்கு கூழாக்கி  கலந்து கொள்ளவும்.
  6. பின் அதனுடன் துருவிய தேங்காய், சுக்கு பொடி, ஏலக்காய்தூள் சேர்த்து நன்கு கலந்து வைத்து கொள்ளவும். பின் 30 நிமிடம் வரை மூடி வைக்கவும்.
  7. பின் அப்பங்களை சமைக்க தயாரான நேரத்தில் சமையல் சோடா உப்பை மாவுடன் சேர்த்து நன்கு கலந்து வைத்து கொள்ளவும்.
  8. அடுப்பில் பணியாரக்கல்லை போட்டு, அதன் குழிகளில் சிறிது நெய்யை விட்டு அது சூடானதும், மாவை ஊற்றி அப்பங்கள் இரு புறமும் நன்கு வெந்து பொன்னிறம் வரும் பொரித்து எடுக்கவும்.
  9. சூடான சுவையான நெய் அப்பம் தயார்!!!
  10. கேரளா மற்றும் நாஞ்சில் நகரில் பண்டிகை மற்றும் விசேஷ நாட்களில் தவறாமல்  இடம்பெறும் இனிப்பு இந்த நெய் அப்பம்!!

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்