வீடு / சமையல் குறிப்பு / நண்டு மசாலா

Photo of Nandu Masala by Asiya Omar at BetterButter
132
6
0.0(0)
0

நண்டு மசாலா

Nov-04-2017
Asiya Omar
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

நண்டு மசாலா செய்முறை பற்றி

நண்டு சூடு,எனவே மழைக்காலத்தில் சாப்பிட ஏதுவான உணவு.மிளகு,சீரகம், சோம்பு சேர்த்து செய்யும் பொழுது சுவையும் அலாதி,உடல் நலத்திற்கும் நல்லது.

செய்முறை டாக்ஸ்

 • நான் வெஜ்
 • மீடியம்
 • தமிழ்நாடு
 • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

 1. நண்டு -1 கிலோ(உடைத்து சுத்தம் செய்தது)
 2. எண்ணெய் ,-100 மில்லி
 3. தாளிக்க முழு பெருஞ்சீரகம்/சோம்பு - 1 டீஸ்பூன்
 4. நறுக்கிய வெங்காயம் - 200 கிராம்
 5. நறுக்கிய தக்காளி -200 கிராம்
 6. இஞ்சி பூண்டு பேஸ்ட்-1 டேபிள்ஸ்பூன்
 7. கரம் மசாலா - அரை டீஸ்பூன்
 8. மல்லி கறிவேப்பிலை -சிறிது.
 9. பச்சை மிளகாய் -2
 10. மஞ்சள் தூள் - அரைடீஸ்பூன்
 11. மிளகாய்த்தூள் - ஒன்னரை டீஸ்பூன்
 12. மல்லித்தூள் -3 டீஸ்பூன்
 13. மிளகுத்தூள் -1 டீஸ்பூன்
 14. உப்பு - தேவைக்கு
 15. அரைக்க வேண்டியது:-
 16. தேங்காய்த்துருவல் - 4 டேபிள்ஸ்பூன்
 17. முந்திரி பருப்பு -6-8
 18. சீரகம் 1 டீஸ்பூன்
 19. பெருஞ்சீரகம் -1 டீஸ்பூன்

வழிமுறைகள்

 1. நண்டை சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும்.
 2. தேங்காய் முந்திரி சீரகம் சோம்பு அரைத்துக் கொள்ளவும்.
 3. நறுக்க வேண்டியவைகளை நறுக்கி தயாராக வைக்கவும்.
 4. நண்டை ஒரு கப் தண்ணீர் மஞ்சள் தூள் சேர்த்து தனியாக ஒரு பாத்திரத்தில் வேக வைக்கவும்.
 5. வாணலியில் எண்ணெய் விட்டு சோம்பு கருவேப்பிலை போட்டு தாளிக்கவும்.வெங்காயம் சேர்த்து வதக்கவும் இஞ்சி பூண்டு கரம் மசாலா சேர்த்து சிம்மில் வைத்து வதக்கவும்.
 6. தக்காளி,பச்சை மிளகாய் ,சிறிது உப்பு சேர்த்து வதங்க விடவும். மிளகாய்த்தூள்,மல்லித்தூள் சேர்க்கவும்.
 7. வெந்த நண்டைச் சேர்க்கவும்.
 8. நன்கு பிரட்டி ஒன்று சேர்ந்து கொதிக்கட்டும்.நண்டு வெந்த தண்ணீரோடு சேர்க்கவும்.
 9. அரைத்த மசால் சேர்த்து நன்கு மூடி போட்டு 5 நிமிடம் கொதிக்கட்டும்.
 10. நன்கு கொதித்து தேங்காய் ,மசாலா வாடை அடங்க வேண்டும்.
 11. கடைசியாக பொடித்த மிளகுத்தூள் தூவி,நறுக்கிய மல்லியிலைச் சேர்க்கவும்.
 12. பிரட்டி விடவும்.சூடான சுவையான நண்டு மசாலா தயார்.
 13. சோறு,சப்பாத்தி,தோசை,ஆப்பத்துடன் பரிமாறலாம். இப்படி செய்யும் பொழுது கூட்டு நிறைய இருக்கும். ருசி செமையாக இருக்கும்.காரம் அவரவர் விருப்பம்
 14. அசத்தலான விருந்தாக இருக்கும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்