வீடு / சமையல் குறிப்பு / கூட்டாஞ்சோறு

Photo of Kootanchoru by Natchiyar Sivasailam at BetterButter
1052
4
0.0(0)
0

கூட்டாஞ்சோறு

Nov-04-2017
Natchiyar Sivasailam
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

கூட்டாஞ்சோறு செய்முறை பற்றி

கூட்டாஞ்சோறு நெல்லையின் பாரம்பரிய உணவு. அரிசி, துவரம் பருப்பு, காய்கறிகள் , முருங்கைக்கீரை சேர்த்து செய்யப் படும் உணவு. நாட்டுக் காய்கறிகள் அதிகம் பயன்படுத்தப் படும். காய்கறிகள், கீரை , பருப்பு சேர்ந்து முழுமையான உணவு.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பிரெஷர் குக்
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. அரிசி 1 கப்
  2. துவரம் பருப்பு 1/4 கப்
  3. நறுக்கிய கத்தரிக்காய், வாழைக்காய், முருங்கைக்காய், கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு, மாங்காய், சேனைக் கிழங்கு 2 கப்
  4. முருங்கைக்கீரை 1 கப்
  5. சின்ன வெங்காயம் 10
  6. புளி பெரிய நெல்லிக்காய் அளவு
  7. உப்பு தேவையான அளவு
  8. தண்ணீர் 31/2 கப்
  9. நல்லெண்ணெய் 1 டேபிள்ஸ்பூன்
  10. அரைப்பதற்கு
  11. மிளகாய் வத்தல் 4
  12. சீரகம் 1 டீஸ்பூன்
  13. சின்ன வெங்காயம் 8
  14. பூண்டு 5 பற்கள்
  15. தேங்காய் துருவல் 2 டேபிள்ஸ்பூன்
  16. மஞ்சள் பொடி 1/2 டீஸ்பூன்
  17. தாளிக்க
  18. நல்லெண்ணெய் 2 டேபிள்ஸ்பூன்
  19. கடுகு, உளுத்தம்பருப்பு 2 டீஸ்பூன்
  20. பெருங்காயத் தூள் 1/4 டீஸ்பூன்
  21. கறிவேப்பிலை 2 ஆர்க்கு

வழிமுறைகள்

  1. காய்கறிகள் மற்றும் கீரை
  2. அரைப்பதற்கு
  3. அரிசி, துவரம் பருப்பு, புளி
  4. தாளிக்க
  5. துவரம் பருப்பை அரைமணி நேரம் ஊறவைக்கவும். அல்லது 3 விசில் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
  6. புளியை ஒரு கப் வென்னீரில் ஊற வைத்துக் கரைக்கவும்.
  7. குக்கரில் 1 டேபிள்ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நறுக்கிய காய்கறிகள் சேர்த்து வதக்கவும்.
  8. காய்கறிகள் சற்று வதங்கியதும் கழுவிய அரிசியைச் சேர்க்கவும்.
  9. துவரம் பருப்பை சேர்க்கவும்.
  10. அரைத்த தேங்காய், மிளகாய் வத்தல், சீரகம், வெங்காயம், பூண்டு கலவையைச் சேர்க்கவும்.
  11. புளிக் கரைசல், தண்ணீர் சேர்த்து முருங்கைக்கீரை சேர்க்கவும்.
  12. தேவையான அளவு உப்பு சேர்த்துக் கிளறவும்.
  13. குக்கரை மூடி 3 விசில் வந்ததும் இறக்கவும்.
  14. கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, பெருங்காயம் தாளித்துச் சேர்க்கவும் .
  15. அப்பளம், கூழ்வத்தல், வெங்காய வடகம் சேர்த்துப் பரிமாறவும்.
  16. சுவையான கூட்டாஞ்சோறு தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்