வீடு / சமையல் குறிப்பு / பொன்னாங்கண்ணி கீரைக் கூட்டு

Photo of Ponnanganni keerai kootu by Asiya Omar at BetterButter
2590
7
0.0(0)
0

பொன்னாங்கண்ணி கீரைக் கூட்டு

Nov-04-2017
Asiya Omar
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

பொன்னாங்கண்ணி கீரைக் கூட்டு செய்முறை பற்றி

இக்கீரை மருத்துவ குணமிக்கது,கண்ணிற்கும்,சருமத்திற்கும் உணவில் சேர்த்து வந்தால நல்லது.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பொன்னாங்கண்ணிக் கீரை பெரிய கட்டு -1
  2. வேக வைக்க பாசிப் பருப்பு -50 கிராம்
  3. சின்ன வெங்காயம் -10
  4. தக்காளி -1
  5. கீரிய பச்சை மிளகாய் -2
  6. நாட்டு பூண்டு பற்கள்- 10
  7. மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்.
  8. சீரகத்தூள் - கால் டீஸ்பூன்
  9. கீரை தாளிக்க:-
  10. எண்ணெய் -1 டேபிள்ஸ்பூன்
  11. சீரகம் - அரைடீஸ்பூன்
  12. உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
  13. கிள்ளிய வற்றல் - 2
  14. நறுக்கிய சின்ன வெங்காயம் - 10
  15. வெந்த கீரை மேலே சேர்க்க:-
  16. தேங்காய்த்துருவல் அல்லது தேங்காய் கொர கொரப்பாக அரைத்தது 3-4 டேபிள்ஸ்பூன்.

வழிமுறைகள்

  1. கீரை தண்டில் இருந்து இலையை மட்டும் ஆய்ந்து வைக்கவும்.மண் போக அலசி எடுத்து பொடியாக நறுக்கவும்.
  2. பாசிப்பருப்பை மேற்சொன்ன பொருட்கள் சேர்த்து வேக வைக்கவும்.
  3. ஒரு கடாயில் தாளிக்க எண்ணெய்,சீரகம்,உளுத்தம் பருப்பு, வற்றல்,வெங்காயம் தாளித்து கீரையை சேர்த்து நன்கு வதக்கவும்.
  4. கீரை வெந்ததும் தேவைக்கு உப்பு, வேக வைத்த பருப்பு சேர்க்கவும், தேங்காய் அரவை சேர்க்கவும்.நன்கு கலந்து விட்டு அடுப்பை சிம்மில் வைத்து அணைக்கவும்..
  5. சுவையான பொன்னாங்கண்ணி கீரைக்கூட்டு தயார். சாதம்,சப்பாத்திக்கு பக்க உணவாகப் பரிமாறலாம்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்