கசோரி | Kachori in Tamil

எழுதியவர் Annapoorani Ganesan  |  4th Nov 2017  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
 • Photo of Kachori by Annapoorani Ganesan at BetterButter
கசோரிAnnapoorani Ganesan
 • ஆயத்த நேரம்

  10

  நிமிடங்கள்
 • சமைக்கும் நேரம்

  30

  நிமிடங்கள்
 • பரிமாறும் அளவு

  10

  மக்கள்

1

0

கசோரி

கசோரி தேவையான பொருட்கள் ( Ingredients to make Kachori in Tamil )

 • மேல் மாவுக்கு தேவையான பொருட்கள்
 • மைதா 1 கப்
 • சூடான எண்ணை 2 மேஜை கரண்டி
 • உப்பு தேவையான அளவு
 • தண்ணீர் தேவையான அளவு
 • நிரப்ப தேவையான பூரணம்
 • கராசேவை பொடித்தது 1கப் அல்லது எண்ணையில் வறுத்த கடலை மாவு 1 கப்
 • வறுத்து ஒன்றிரண்டாக பொடித்த வேர்க்கடலை 1மேஜை கரண்டி
 • பெருங்காய பொடி 1/3 தேக்கரண்டி
 • மஞ்சள்தூள் 1/2 தேக்கரண்டி
 • சீரகப்பொடி 1தேக்கரண்டி
 • தணியா பொடி 1 தேக்கரண்டி
 • மிளகாய் தூள் 1தேக்கரண்டி
 • மாங்காய் பொடி 1தேக்கரண்டி
 • கரம் மசாலா பொடி 1தேக்கரண்டி
 • சோம்பு பொடி 1தேக்கரண்டி
 • ஓமம் 1தேக்கரண்டி
 • சுக்கு பொடி 1தேக்கரண்டி
 • சர்க்கரை 2 மேஜை கரண்டி
 • எண்ணை 2மேஜை கரண்டி
 • எண்ணை பொரிப்பதற்கு தேவையான அளவு

கசோரி செய்வது எப்படி | How to make Kachori in Tamil

 1. ஒரு பாத்திரத்தில் மைதா,உப்பு, சூடான எண்ணை மூன்றையும் ஒன்றாக் கலந்து சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து ரொட்டி மாவு போல் பிசைந்து மூடி போட்டு 30 நிமிடம் வைக்கவும்.
 2. ஒரு வாணலியில் 2 மேஜை கரண்டி எண்ணை ஊற்றி சூடு செயது அதில் எல்லா மசாலா பொடிகளையும் ஒவ்வொன்றாக சேர்த்து வாசனை வரும் வரை வறுக்கவும்.
 3. ‎பிறகு அதில் பொடித்த காராசேவை மற்றும் நிலக்கடலை கலந்து இறக்கி ஆற வைக்கவும்.
 4. ‎பிசைந்து வைத்த மாவை எடுத்து உருட்டி சிறு சிறு உருண்டைகளாக்கி வைத்துக்கொள்ளவும்.
 5. ஒவ்வொரு உருண்டையாக எடுத்து சிறிய வட்டமான தடிமனான பூரி போல் இட்டு அதன் நடுவில் 1மேஜை கரண்டி அளவு பூரணத்தை நிரப்பி ஓரங்களை இணைத்து மூடி(ஒட்டி)) சிறிய பந்து போல் உருட்டிக் கொள்ளவும்.
 6. ஒரு கடாயில் எண்ணை ஊற்றி சூடாக்கி அதில் 4 அல்லது 5 கசோரிகளை போட்டு மிதமான தீயில் பொன் நிறமாகும் வரை பொறித்து எடுக்கவும்.
 7. எண்ணை வடிய வைத்து ஆறிய பின் காற்று புகாத டப்பாவில் நிறைத்து வைக்கவும்.
 8. ‎டீ அல்லது காபியுடன் பறிமாறவும்

எனது டிப்:

வேகமான தீயில் பொறித்தால் கசோரி சீக்கிரம் சிவந்து விடும் ஆனால உள் பாகம் வேகாமல் இருந்துவிடும்.

Reviews for Kachori in tamil (0)