வீடு / சமையல் குறிப்பு / மோர்சாரும் பீர்க்கங்காய் துவையலும்

Photo of Morcharum peerkangai thuvayalum by Krishnasamy Vidya Valli at BetterButter
313
4
0.0(0)
0

மோர்சாரும் பீர்க்கங்காய் துவையலும்

Nov-05-2017
Krishnasamy Vidya Valli
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

மோர்சாரும் பீர்க்கங்காய் துவையலும் செய்முறை பற்றி

வேறு காய்கள் இல்லாத நிலையில் பீர்க்கங்காய் மட்டும் போட்டு துவையல் செய்து குழம்பிற்கு பதிலாக மோர் சார் செய்து அன்றைய சமையலை முடித்து விடுவார்கள். தேவைப்பட்டால் அப்பளம் சுட்டுக்கொள்ளலாம். முக்கியமாக விருந்தினர் சென்றபின் செய்யப்படும் simple சமையல் இது

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பீர்க்கங்காய் நறுக்கியது - 2 cup
  2. தேங்காய் துருவல் - 2 தேக்கரண்டி
  3. கடலைப்பருப்பு - 2 தேக்கரண்டி
  4. உளுத்தம்பருப்பு - 2 தேக்கரண்டி
  5. மிளகாய் வத்தல் - 3
  6. பெருங்காயம் - 1 சிறிய துண்டு
  7. பச்ச மிளகாய் - 1 அல்லது 2
  8. கருவேப்பிலை - 2 ஆர்க்கு
  9. தேங்காய் எண்ணெய் - 3 தேக்கரண்டி
  10. உப்பு - 1 1 / 4 தேக்கரண்டி
  11. புளி- சிறியநெல்லிக்காய்அளவு
  12. தாளிக்க கடுகு -1தேக்கரண்டி கருவேப்பிலை 2 ஆர்க்கு
  13. மோர்சார் செய்வதற்கு தயிர்-2 cup(சிலும்பல்இல்லாதவாறு)
  14. அரிசிமாவு-1தேக்கரண்டி
  15. மிளகாய் வத்தல் - 2
  16. கடுகு - 1 தேக்கரண்டி
  17. உளுத்தம்பருப்பு - 1 தேக்கரண்டி
  18. கருவேப்பிலை - 2 ஆர்க்கு
  19. வெந்தயம் - 1 / 2 தேக்கரண்டி
  20. உப்பு- 1 தேக்கரண்டி
  21. தேங்காய்எண்ணெய்-1தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. கடாயில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடலைப்பருப்பு உளுத்தம்பருப்பு மிளகாய் வத்தல் பெருங்காயம் சேர்த்து வறுத்து எடுத்துக் கொள்ளவும்
  2. வறுத்ததை ஆறவிட்டு பின்னர் தேங்காய்துருவல்சேர்த்து மிக்ஸியிலிட்டு ஒரு திருப்பு திருப்பி க்கொள்ளவும்
  3. மீண்டும் ஒரு தேக்கரண்டி எண்ணெய் விட்டு பீர்க்கங்காய் நறுக்கியது கருவேப்பிலை பச்ச மிளகாய் சேர்த்து வதக்கவும்
  4. மிக்ஸியில் பாதி அரைத்ததுடன் வதக்கிய காய் உப்பு மற்றும் புளி சேர்த்து அரைக்கவும்
  5. கடாயில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் விட்டு கடுகு கருவேப்பிலை தாளித்து அரைத்ததுடன் சேர்த்தால் சுவையான துவையல் தயார்
  6. தயிரில் அரிசிமாவை கரைத்து உப்பு சேர்த்து தனியாக வைக்கவும்
  7. கடாயில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு உளுத்தம்பருப்பு வெந்தயம் மிளகாய் வத்தல் கருவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்
  8. அதில் தயிர் கலவையை சேர்த்து ஒரு கொதி வந்தவுடன் இறக்கி விடலாம். அருமையான மோர் சார் ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்