வீடு / சமையல் குறிப்பு / வெற்றிலை லட்டு

Photo of BETEL LADOO by Saivardhini Badrinarayanan at BetterButter
519
3
0.0(0)
0

வெற்றிலை லட்டு

Nov-05-2017
Saivardhini Badrinarayanan
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

வெற்றிலை லட்டு செய்முறை பற்றி

நமது பாரம்பரியமான வெற்றிலை அனைத்து விழாக்களிலும் இது இல்லாமல் நிறைவு பெறாது..அந்த வெற்றிலையை வைத்து அருமையான லட்டு.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தீபாவளி
  • குஜராத்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. வெற்றிலை 7-8
  2. சுண்டிய பால் (Condensed Milk) 1/2 கப்
  3. குல்கந்து 2 மேஜைக்கரண்டி
  4. முந்திரி, பாதாம் ,பிஸ்தா நறுக்கியது சிறிதளவு
  5. தேங்காய் துருவல் 1/2 கப்
  6. நெய் 1 மேஜைக்கரண்டி
  7. தேங்காய் துருவல் (desiccated coconut) 2 மேஜைக்கரண்டி

வழிமுறைகள்

  1. முதலில் வெற்றிலையை சிறியதாக நறுக்கி மிக்ஸில் சேர்த்து அதனுடன் சுண்டிய பால் சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும்.
  2. ஒரு கடாயில் நெய் சேர்த்து நறுக்கிய முந்திரி,பாதாம், பிஸ்தா சேர்த்து நன்கு பொன்னிறமாக வறுத்து தனியே எடுத்து வைக்கவும்.
  3. அதே கடாயில் மீதமுள்ள நெயில் தேங்காய் துருவல் சேர்த்து நன்கு பொன்னிறமாக வறுத்து கொள்ளவும்.
  4. பின் அரைத்த வெற்றிலை விழுது தேங்காயுடன் சேர்த்து நன்கு கலக்கவும்.
  5. பின் ஆறியவுடன் சிறு உருண்டைகளாக பிடித்து கொள்ளவும்.
  6. குல்கந்து மற்றும் வறுத்த முந்திரி பாதாம் பிஸ்தா கலவையை சேர்த்து கலந்து கொள்ளவும்.
  7. அந்த உருண்டைகளை ஒவொன்றாக எடுத்து நடுவில் அழுத்தி அதில் குல்கந்து கலவையை வைத்து மறுபடியும் உருண்டைகளாக செய்து கொள்ளவும்.
  8. பின் அந்த உருண்டைகளை தேங்காய் துருவலில் உருட்டி எடுத்து பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்