வீடு / சமையல் குறிப்பு / கம்பம்புல் தோசை

Photo of Pearl millet dosa by Natchiyar Sivasailam at BetterButter
788
4
0.0(0)
0

கம்பம்புல் தோசை

Nov-05-2017
Natchiyar Sivasailam
720 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

கம்பம்புல் தோசை செய்முறை பற்றி

கம்பம்புல் சிறு தானியங்களில் ஒன்று. மணமும் சுவையும் மிகுந்தது. கம்மம்புல் தோசை செய்வதற்கு எளிதானது.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • லோ ஃபாட்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கம்பம்புல் 1 கப்
  2. இட்லி அரிசி 1 கப்
  3. உளுந்தம்பருப்பு 1/2 கப்
  4. வெந்தயம் 1 டீஸ்பூன்
  5. உப்பு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. கம்பம்புல் , அரிசி இரண்டையும் சேர்த்து நன்றாகக் கழுவி நான்கு மணிநேரம் ஊறவைக்கவும்.
  2. உளுந்தம்பருப்பு, வெந்தயம் இரண்டையும் சேர்த்து நன்றாகக் கழுவி ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.
  3. ஊறிய பிறகு உளுந்தம்பருப்பு , வெந்தயத்தை மிக்சியில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக மாவாக அரைத்துக் கொள்ளவும்.
  4. பிறகு கம்பம்புல், அரிசியை தேவையான அளவு தண்ணீர் சேர்த்து அரைக்கவும்.
  5. இரண்டு மாவையும் ஒரு பெரிய பாத்திரத்தில் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு பிசைந்து வைக்கவும்.
  6. இரவு முழுவதும் அல்லது எட்டு மணி நேரம் மாவை மூடி வைக்கவும்.
  7. மாவு பொங்கி வந்ததும் கரண்டியால் கலந்து தோசை ஊற்றவும்.
  8. சுவையும், மணமும் மிகுந்த கம்பம்புல்ல் தோசை வீட்டில் அனைவரும் விரும்பும் வகையில் இருக்கும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்