வீடு / சமையல் குறிப்பு / நெல்லை வெண்டைக்காய் புளிப்பச்சடி

Photo of Nellai vendaikai puli pachadi by Asiya Omar at BetterButter
603
4
0.0(0)
0

நெல்லை வெண்டைக்காய் புளிப்பச்சடி

Nov-05-2017
Asiya Omar
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

நெல்லை வெண்டைக்காய் புளிப்பச்சடி செய்முறை பற்றி

நெல்லை சைவ விருந்தில் பாரம்பரியமாக பச்சடி பரிமாறுவது வழக்கம்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. வெண்டைக்காய் - கால் கிலோ
  2. நறுக்கிய பெரிய வெங்காயம் 1
  3. நறுக்கிய பெரிய தக்காளி -1
  4. கீறிய பச்சை மிளகாய் -2
  5. சிறிய எலுமிச்சை அளவில் கரைத்த புளி கரைசல்
  6. உப்பு - தேவைக்கு.
  7. அரைக்க:-
  8. தேங்காய்த்துருவல் -3 டேபிள்ஸ்பூன்
  9. மஞ்சள் தூள் -அரை டீஸ்பூன்
  10. சீரகம் -3/4 டீஸ்பூன்
  11. பச்சை மிளகாய் -1
  12. தாளிக்க:-
  13. எண்ணெய் - 1- 2 டேபிள்ஸ்பூன்
  14. கடுகு, உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
  15. பெருங்காயம் - பின்ச்
  16. கறிவேப்பிலை - 2 இணுக்கு

வழிமுறைகள்

  1. வெண்டைக்காயை நன்கு கழுவி துடைத்துக் கொள்ளவும்.முதலில் கொண்டை நுனிபகுதியை நீக்கி நீளவாக்கில் நறுக்கி பின் குறுக்கு வாக்கில் நறுக்கவும்.
  2. தேங்காய்,சீரகம்,பச்சை மிளகாய்,மஞ்சள் தூள் சேர்த்து கொர கொரப்பச்க அரைத்து வைக்கவும்.
  3. முதலில் குக்கரில் அல்லது பாத்திரத்தில் எண்ணெய் விட்டு சூடானவுடன் நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கி,பின் தக்காளி, பச்சை மிளகாய், உப்பு சேர்த்து வதக்கவும்.
  4. பொடியாக நறுக்கிய வெண்டைக்காய் சேர்க்கவும்.புளித்தண்ணீர் அரை கப் சேர்க்கவும்.நன்கு கலந்து விட்டு 2 விசில் வைத்து இறக்கவும்.
  5. ஆவியடங்கிய பின்பு திறந்து தேங்காய் அரைத்த மசால் சேர்க்கவும்.கலந்து விட்டு உப்பு சரி பார்க்கவும்.
  6. தயாரான பச்சடியில தாளித்து கொட்டவும்.
  7. சூடான சாதத்துடன இதுவும் ஒரு வெரைட்டி பக்க உணவாகப் பரிமாறலாம்.
  8. சுவையான வெண்டைக்காய் புளிப்பச்சடி தயார். நெல்லை பக்கம் ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு முறையில் இந்த பச்சடி செய்வாங்க.சிலர் சாம்பார் பொடி போட்டும் செய்வாங்க. ஆனால் மேற்சொன்ன முறை தான் சைவாள் பாரம்பரியம் என்று தோழி உமா சங்கர் சொல்லிக் கொடுத்த ரெசிப்பி.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்