வீடு / சமையல் குறிப்பு / கேரள புளி இஞ்சி

Photo of Kerala puliinchi by Krishnasamy Vidya Valli at BetterButter
324
5
0.0(0)
0

கேரள புளி இஞ்சி

Nov-06-2017
Krishnasamy Vidya Valli
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

கேரள புளி இஞ்சி செய்முறை பற்றி

ஓண சத்தியின் ஊறுகாய் வெரைட்டி இது

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • கேரளா

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. இஞ்சி - 1 / 2 cup
  2. பச்ச மிளகாய் - 4 முதல் 6
  3. புளி - ஒரு நெல்லிக்காய் அளவு
  4. உப்பு - 1 தேக்கரண்டி
  5. வெல்லம் - ஒரு துண்டு
  6. தேங்காய் எண்ணெய் - 4 தேக்கரண்டி
  7. தாளிக்க கடுகு - 1 தேக்கரண்டி
  8. வெந்தயம் - 1 தேக்கரண்டி
  9. பெருங்காயம் - 2 சிட்டிகை
  10. கருவேப்பிலை - 1 ஆர்க்கு
  11. பாரம்பரியமுறைப்படிசெய்யும்போது மிளகாய்வத்தல்/பொடி சேர்ப்பது இல்லை காலப்போக்கில் சிவப்பு கலருக்காக சேர்கின்றனர்

வழிமுறைகள்

  1. இஞ்சியை தோல் சீவி நறுக்கிவைக்கவும்.
  2. பச்ச மிளகாயை காம்பு கிள்ளி விட்டு நறுக்கிய இஞ்சி சேர்த்து கரகரப்பாக தண்ணீர் விடாமல் அரைக்கவும் மிக்ஸியில் ஒரு திருப்பு திருப்பினால் போதுமானது
  3. அரைக்க விரும்பவில்லை எனில் பொடியாக நறுக்கிக்கொள்ளவும்
  4. கடாயில் 3 தேக்கரண்டி எண்ணெய் விட்டு அரைத்த விழுது/நறுக்கியது சேர்த்து நன்றாக வதக்கவும்
  5. பச்ச வாசனை போனவுடன் புளி கரைத்து சேர்க்கவும்
  6. கொதிவந்தவுடன் உப்பு மற்றும் வெல்லம் சேர்த்து சுருள கிளறவும்
  7. முதலில் விட்ட எண்ணெய் மேலே வரும் நிலையில் இறக்கி விடவும்
  8. கடாயில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு வெந்தயம் கருவேப்பிலை பெருங்காயம் தாளித்து சேர்த்தால் புளி இஞ்சி தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்