வீடு / சமையல் குறிப்பு / நெல்லை கருணைக் கிழங்கு மசியல்

Photo of Mashed elephant yam by Natchiyar Sivasailam at BetterButter
728
7
0.0(0)
0

நெல்லை கருணைக் கிழங்கு மசியல்

Nov-06-2017
Natchiyar Sivasailam
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

நெல்லை கருணைக் கிழங்கு மசியல் செய்முறை பற்றி

கருணைக் கிழங்கு மசியல் நெல்லை மாவட்டத்தின் பாரம்பரிய உணவு வகைகளுள் ஒன்று. பிடி கருணை என்றும் சொல்வார்கள். கருணைக் கிழங்கு புளி, நல்லெண்ணெய், சின்ன வெங்காயம் சேர்த்து சமைக்கும் போது அதன் சுவையே அலாதி தான். கருணைக் கிழங்கு மூல வியாதிக்காரர்களுக்கு மிகவும் ஏற்றது. நீண்ட நேரம் உட்கார்ந்து வேலை செய்பவர்கள் வாரம் ஒரு நாள் கருணைக் கிழங்கு மசியல் சாப்பிடுவது நல்லது.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஸாட்டிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. கருணைக் கிழங்கு 1/4 கி.
  2. சின்ன வெங்காயம் 100கிராம்
  3. கெட்டியான புளிக் கரைசல் 2 டேபிள்ஸ்பூன்
  4. மஞ்சள் பொடி 1/2 டீஸ்பூன்
  5. உப்பு தேவையான அளவு
  6. தாளிக்க
  7. கடுகு, உளுத்தம்பருப்பு 1 டீஸ்பூன்
  8. பெருங்காயத் தூள் 1/4 டீஸ்பூன்
  9. மிளகாய் வத்தல் 2-4
  10. கறிவேப்பிலை 2 ஆர்க்கு
  11. நல்லெண்ணெய் 3 டேபிள்ஸ்பூன்

வழிமுறைகள்

  1. கருணைக் கிழங்கை மண் போக நன்றாகக்கழுவி குக்கரில் 5 விசில் வரும் வரை வேக வைக்கவும்.
  2. சின்ன வெங்காயத்தை தோலுரித்து நீளவாக்கில் நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
  3. வேகவைத்த கருணைக் கிழங்கை தோலுரித்து கையால் மசிக்கவும்.
  4. மசித்த கருணைக் கிழங்கில் மஞ்சள் பொடி, புளிக் கரைசல், தேவையான அளவு உப்பு சேர்த்துக் கலந்து வைக்கவும்.
  5. கனமான வாணலியில் 3 டேபிள்ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, பொரிந்ததும் மிளகாய் வத்தல் கிள்ளிப் போடவும்.
  6. மிளகாய் வத்தல் வறுத்ததும் நறுக்கிய சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
  7. வெங்காயம் வதங்கியதும் , கருணைக் கிழங்கு கலவையைச் சேர்க்கவும்.
  8. நன்கு கிளறவும். 2 நிமிடம் கிளறி விட்டு அடுப்பை சிம்மில் வைத்துக் கொள்ளவும்.
  9. அவ்வப்போது கிளறவும். மசியல் கெட்டியானதும் அடுப்பை அணைத்து விடவும்.
  10. கருணைக் கிழங்கு மசியல் ரசத்தோடு சாப்பிட சரியான ஜோடி.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்