வீடு / சமையல் குறிப்பு / மலபார் முட்டை மாலை-முட்டை சுருக்கா

Photo of Malabar Mutta Maala - Mutta Surukka(Pinjanathappam) by Ayesha Ziana at BetterButter
72
3
0.0(0)
0

மலபார் முட்டை மாலை-முட்டை சுருக்கா

Nov-06-2017
Ayesha Ziana
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

மலபார் முட்டை மாலை-முட்டை சுருக்கா செய்முறை பற்றி

முட்டையையும் சீனியையும் வைத்து செய்யும் மலபாரின் பாரம்பரிய இனிப்பு உணவு

செய்முறை டாக்ஸ்

 • மீடியம்
 • ஈத்
 • கேரளா
 • பாய்ளிங்
 • ஸ்டீமிங்
 • டெஸர்ட்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

 1. முட்டை 5
 2. சீனி 3/4 கப்பிற்கு சற்று குறைவாக
 3. தண்ணீர் 1/2 கப்
 4. ஏலக்காய் 2

வழிமுறைகள்

 1. முதலில் முட்டைகளின் வெள்ளை கருவையும் மஞ்சள் கருவையும் பிரித்து தனித்தனி பாத்திரங்களில் வைக்கவும்.
 2. முட்டை மாலை செய்ய: முட்டையின் மஞ்சள் கருக்களை நன்றாக அடித்து வைக்கவும்.
 3. வாணலியில் தண்ணீரையும் சீனியையும் சேர்த்து ஒரு கம்பி பதத்திற்கு பாகு காய்ச்சவும்.
 4. வெள்ளைக்கருவில் 1/2 ஸ்பூன் எடுத்து பாகில் ஊற்றி 1/2 நிமிடம் வேக விட்டு நன்றாக கிளறி எடுத்து விடவும். பாகில் ஏதாவது அசுத்தம் இருந்தால் அது வெள்ளைகருவில் ஒட்டி வந்து விடும். அதற்காக மட்டுமே இந்த ஸ்டெப்.
 5. பின்னர் ஒரு சிறிய பிளாஸ்டிக் கப்பில் சின்ன துளைகள் போட்டோ, அல்லது சிறிய துளைகள் உடைய இடியப்பகுழலிலோ ஒரு கரண்டி முட்டை மஞ்சள் கருவை ஊற்றி, அதை சீனி பாகில் வட்டமாக மாவு தீரும் வரை ஊற்றிக் கொண்டே வரவும். துளைகளின் அளவைப் பொறுத்தே முட்டை மாலையின் வடிவம் அமையும்.
 6. ஓரிரு நிமிடங்கள் கழிந்ததும், நன்றாக கலக்கி எடுத்து விடவும். ஒரு நெக்லஸ் வடிவில் வட்டமாக இருப்பதால் இதை முட்டை மாலை என்பார்கள்.
 7. முட்டை சுருக்கா செய்ய: முட்டை வெள்ளைக்கருவை நன்றாக அடித்து வைக்கவும். ஏற்கனவே செய்து வைத்த சீனிப்பாகையும் தேவைக்கு சேர்த்து கலக்கவும். அவ்வளவு சீனிப்பாகையும் கூட சேர்க்கலாம்.
 8. நன்றாக பொடித்த ஏலக்காயையும் சேர்த்து மீண்டும் கலக்கி, ஒரு நெய் தடவிய தட்டில் ஊற்றி 15-20 நிமிடம் ஆவியில் வேக வைக்கவும். பின்னர், துண்டுகள் போடவும். இது தான் முட்டை சுருக்கா. இதை பிஞ்சணத்தப்பம் என்றும் சொல்வார்கள்.
 9. அருமையான மலபார் முட்டை மாலை-முட்டை சுருக்கா தயார். இது மலபார் முஸ்லிம்கள் பெரும்பாலும் ஈத் பெருநாளுக்கு செய்யும் ஒரு இனிப்பு உணவாகும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்