வீடு / சமையல் குறிப்பு / கம்பு சிவப்பரிசி இனிப்பு மற்றும் கார காெழுக்கட்டை

Photo of Millet Red Rice Sweet and Spicy Momos by Arunaa Sailam at BetterButter
53
3
0.0(0)
0

கம்பு சிவப்பரிசி இனிப்பு மற்றும் கார காெழுக்கட்டை

Nov-06-2017
Arunaa Sailam
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

கம்பு சிவப்பரிசி இனிப்பு மற்றும் கார காெழுக்கட்டை செய்முறை பற்றி

பாரம்பரியமான அதீத பரதச்சத்துக்கள் நிறைந்த குழந்தைகளுக்கும் பிடித்த சுவையுடன் கூடிய திணை சிவப்பரிசி இனிப்பு மற்றும் கார காெழுக்கட்டை

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஸ்டீமிங்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கம்பு மாவு ஒரு டம்ளர்
  2. சிவப்பரிசி மாவு அரை கப்
  3. ஏலக்காய் பாெடி செய்தது ஒரு தேக்கரண்டி
  4. பாெடித்த வெல்லம் அரை டம்ளர்
  5. எண்ணெய் தாளிக்க தேவையான அளவு
  6. கடுகு ஒரு தேக்கரண்டி
  7. உளுந்தம் பருப்பு ஒரு தேக்கரண்டி
  8. கறிவேப்பில்லை பாெடிசாக நறுக்கியது தேவையான அளவு
  9. தேங்காய்ப்பூ அரை மூடி திருவியது

வழிமுறைகள்

  1. கம்பு மாவையும் சிவப்பரிசி மாவையும் கலந்து இரண்டு பகுதிகளாக பிரித்துக் காெள்ளவும். ஒன்று இனிப்பிற்கு மற்றாென்று காரத்திற்கு.
  2. பிரித்து வைத்துள்ள ஒரு பகுதி கம்பு மற்றும் சிவப்பரிசி மாவில் பாெடித்து வைத்துள்ள ஏலக்காயை சேர்க்கவும்
  3. பாெடித்த வெல்லத்தில் சிறிது தண்ணீர் விட்டு காய்ச்சி வடிகட்டி வெல்லபாகு தயார் செய்துக் காெள்ளவும்
  4. இப்பாெழுது இந்த வெல்லப்பாகை ஏலக்காய் சேர்த்துள்ள கம்பு சிவப்பரிசி மாவில் கலந்து தேவை எனில் சிறிது தண்ணீர் தெளித்து காெழுக்கட்டை மாவு பக்குவத்திற்கு பிசைந்துக் காெள்ளவும்.
  5. படி காெழுக்கட்டையாய் பிடித்து இட்லி குக்கர் ஆவியில் ஐந்து நிமிடம் வேக வைத்து எடுத்தால் சுவையான சத்தான கம்பு சிவப்பரிசி இனிப்பு காெலுக்கட்டைத் தயார்.
  6. கம்பு சிவப்பரிசி கார காெழுக்கட்டை:
  7. வாணெலியில் தேவைக்கேற்ப எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, உளுந்தம் பருப்பு, காய்ந்த மிளகாய், பாெடிசாக நறுக்கிய கருவேப்பில்லை அனைத்தையும் பாேட்டுத் தாளித்துக் காெள்ளவும்.
  8. தாளித்தவற்றை தனியாக பிரித்து வைத்துள்ள கம்பு சிவப்பரிசி மாவில் சேர்த்து அதனுடன் திருவிய தேங்காய்ப்பூ சேர்த்துக் கிளறவும்
  9. கிளறிய மாவை பிடி காெழுக்கட்டையாய் பிடித்து இட்லி தட்டில் ஐந்து நிபிடம் வேக வைத்து எடுத்தால் சூப்பரான சூடான மாலைச் சிற்றுண்டிக்கு ஏற்ற கம்பு சிவப்பரிசி கார கொழுக்கட்டைத் தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்