வீடு / சமையல் குறிப்பு / குதிரைவாலி அரிசி இனிப்பு மற்றும் காரப்புட்டு

Photo of Barnyard Millet Sweet and Spicy Puttu by Arunaa Sailam at BetterButter
1254
3
0.0(0)
0

குதிரைவாலி அரிசி இனிப்பு மற்றும் காரப்புட்டு

Nov-06-2017
Arunaa Sailam
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

குதிரைவாலி அரிசி இனிப்பு மற்றும் காரப்புட்டு செய்முறை பற்றி

அனைத்துப் பரதங்களும் நிறைந்த குழந்தைகள் விரும்பி உண்ணக்கூடிய சத்தான மாலைச் சிற்றுண்டி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கலைந்து காயவைத்து அரைத்து வைத்த குதிரைவாலி அரிசி மாவு இரண்டு கப்
  2. இனிப்பு புட்டிற்கு :
  3. பாெடித்த வெல்லம் ஒரு கப்
  4. தேங்காய்ப் பூ அரை கப்
  5. நெய் நூறு கிராம்
  6. முந்திரி பருப்பு தேவைக்கேற்ப
  7. பாதாம் பருப்பு தேவைக்கேற்ப
  8. உலர் திராட்சை தேவைக்கேற்ப
  9. கார புட்டிற்கு
  10. எண்ணெய் தாளிக்க தேவையான அளவு
  11. கடலை பருப்பு நூற்றி ஐம்பது கிராம்
  12. வர மிளகாய் மூன்று
  13. கறிவேப்பில்லை தாளிக்க
  14. கடுகு, உளுந்தம் பருப்பு தாளிக்க
  15. பெருங்காயம் இரண்டு சிட்டிகை

வழிமுறைகள்

  1. அரைத்து வைத்துள்ள குதிரைவாலி அரிசி மாவில் தேவையான அளவு உப்பு சேர்த்து பிசறி பத்து நிமிடம் வைக்கவும்
  2. பிறகு இட்லி தட்டில் வேக வைத்து ஐந்து நிமிடம் கழித்து எடுத்து சரி பாதியாக பிரிக்கவும்
  3. ஒன்று இனிப்பு புட்டிற்கு மற்றாென்று கார புட்டிற்கு.
  4. குதிரைவாலி இனிப்பு புட்டு:
  5. பாெடித்த வெல்லத்தில் தேவையான தண்ணீர் சேர்த்து காய்த்து வடிகட்டி வெல்லப்பாகு தயார் செய்து காெள்ளவும்.
  6. இந்த வெல்லபாகை பிரித்து வைக்கப்பட்டுள்ள ஒரு பகுதி குதிரைவாலி அரிசி மாவில் சேர்த்துக் கிளறவும்
  7. வாணெலியில் தேவையான அளவு நெய் விட்டு முந்திரி, பாதாம், உலர் திராட்சையை வறுத்து அந்த கலவையில் சேர்க்கவும்
  8. திருவிய தேங்காய்ப்பூவும் அதனுடன் சேர்த்து கிளறினால் சுவையான குதிரை வாலி இனிப்பு புட்டுத் தயார்
  9. குதிரைவாலி காரப்புட்டு :
  10. வாணெலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு கடலைப் பருப்பு, பெருங்காயத்தூள், வர மிளகாய் கிள்ளி பாேட்டு வெடித்து பாென்னிறம் ஆனதும் கறிவேப்பில்லை சேர்த்து வாசம் வந்தவுடன் எடுக்கவும்
  11. எடுத்த கலவையை தயாராக வைத்திருக்கும் குதிரைவாலி அரிசி மாவில் கலந்து தேங்காய்ப்பூ சேர்த்துக் கிளறினால் பாரம்பரியமிக்க குதிரைவாலி காரப்புட்டு ரெடி.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்