வீடு / சமையல் குறிப்பு / பீர்க்கங்காய் பச்சடி

Photo of Peerkangai pachadi by Krishnasamy Vidya Valli at BetterButter
645
3
0.0(0)
0

பீர்க்கங்காய் பச்சடி

Nov-07-2017
Krishnasamy Vidya Valli
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

பீர்க்கங்காய் பச்சடி செய்முறை பற்றி

பீர்க்கங்காய் வீட்டில் வளரும் கொடியானதால் அனைவருக்கும் எளிதில் கிடைக்கும் நீர் காய். ஒரு நாள் துவையல் அரைத்தால் மற்ற நாள் இந்த பச்சடி செய்வார்கள்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. பீர்க்கங்காய் நறுக்கியது - 2 cup
  2. பெரிய வெங்காயம் - 2
  3. தக்காளி - 2
  4. பாசிப்பருப்பு - 4 தேக்கரண்டி
  5. தேங்காய் துருவல் - 4 தேக்கரண்டி
  6. மிளகாய் வத்தல் - 2
  7. பச்ச மிளகாய் - 1
  8. சீரகம் - 1 / 2 தேக்கரண்டி
  9. பெருங்காயம் - 1 சிட்டிகை
  10. உப்பு - 1 1 / 2 தேக்கரண்டி
  11. புளி கரைசல் - 2 தேக்கரண்டி
  12. வெல்லம் - ஒரு சிறிய துண்டு
  13. தாளிக்க கடுகு - 1 தேக்கரண்டி உளுத்தம்பருப்பு - 1 தேக்கரண்டி கறிவேப்பிலை - 2 ஆர்க்கு
  14. எண்ணெய் - 2 தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. பாசிப்பருப்பை தண்ணீர் விட்டு 10 நிமிடம் ஊறவைக்கவும்
  2. பாசிப்பருப்பு மற்றும் பீர்க்கங்காய் சேர்த்து குக்கரில் ஒரு விசில் வேக வைக்கவும்
  3. தேங்காய் துருவல் சீரகம் மிளகாய் வத்தல் பச்ச மிளகாய் பெருங்காயம் சேர்த்து நன்றாக அரைக்கவும்
  4. வெங்காயம் தக்காளி பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்
  5. கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு உளுத்தம்பருப்பு கருவேப்பிலை தாளிக்கவும் வெங்காயம் சேர்த்து வதக்கவும்
  6. பச்ச வாசனை போனவுடன் தக்காளி சேர்த்து வதக்கவும்
  7. வேகவைத்த பாசிப்பருப்பு பீர்க்கங்காய் புளி கரைசல் வெல்லம் மற்றும் உப்பு சேர்த்து ஒரு கொதிவிடவும்
  8. அரைத்த விழுதை சேர்த்து ஒரு கொதி வந்தவுடன் இறக்கி விடலாம்
  9. சுவையான பீர்க்கங்காய் பச்சடி தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்