வீடு / சமையல் குறிப்பு / பக்கோடா குழம்பு

299
3
0.0(0)
0

பக்கோடா குழம்பு

Nov-07-2017
Banupriya Jawahar
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
35 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

பக்கோடா குழம்பு செய்முறை பற்றி

எங்கள் வீடுகளில் மணமக்களுக்கு இரவு விருந்தில் இடம்பெறும் உணவு.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. பக்கோடா 1/4 கிலோ
  2. புளி எலுமிச்சை அளவு
  3. நல்லெண்ணெய் 2 குழிக்கரண்டி
  4. உப்பு தேவையான அளவு
  5. தாளிக்க:
  6. கடுகு 1 தேக்கரண்டி
  7. அ.உ.பருப்பு 1 தேக்கரண்டி
  8. வெந்தயப்பொடி 1/2 சிட்டிகை
  9. சின்ன வெங்காயம் 8
  10. தக்காளி 1
  11. கறிவேப்பிலை சிறிது
  12. வறுத்து அரைக்க:
  13. மிளகாய் வற்றல் 8
  14. மல்லி 2 தேக்கரண்டி
  15. சீரகம் 1 தேக்கரண்டி
  16. தேங்காய் துருவல் சிறிது
  17. சின்ன வெங்காயம் 10

வழிமுறைகள்

  1. புளியைக் கரைத்துக் கொள்ளவும்.
  2. வாணலியில் சீரகம், மல்லி, மிளகாய் வற்றலை வறுக்கவும்.
  3. அத்துடன் தேங்காய் துருவல், சின்ன வெங்காயம் 10 சேர்த்து லேசாக வறுக்கவும்.
  4. வறுத்த பொருட்களை, ஆறியதும் மிக்ஸியில் போட்டு விழுதாக அரைக்கவும்.
  5. அரைத்த விழுதை புளிக் கரைசலோடு சேர்க்கவும்.
  6. ஒரு வாணலியில் நல்லெண்ணெயை விட்டு கடுகு, அ.உ.பருப்பு, வெந்தயம், வெங்காயம், தக்காளி, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
  7. தாளித்ததில், அரைத்து வைத்துள்ள விழுதை சேர்க்கவும்.
  8. தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
  9. மாசாலா பச்சை வாசனை நீங்கி, எண்ணெய் பிரிந்து வரும்போது, பக்கோடாவை சேர்க்கவும்.
  10. பக்கோடா சேர்த்து, 2 நிமிடத்தில் அடுப்பை அணைத்து விடவும்.
  11. கால்மணி நேரம் அப்படியே வைத்து விடவும்.
  12. பக்கோடா, குழம்பில் நன்கு ஊறியதும் பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்