வீடு / சமையல் குறிப்பு / மார்கண்டம் சூப்/ நெஞ்செலும்பு சூப்/மட்டன் மாறெலும்பு சூப்

Photo of Maarkandam Soup/ Nenju Elumbu Soup/Mutton Rib Bone Soup by Rathy V at BetterButter
7168
12
4.8(0)
0

மார்கண்டம் சூப்/ நெஞ்செலும்பு சூப்/மட்டன் மாறெலும்பு சூப்

Jan-10-2016
Rathy V
7 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • சூப்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. மட்டன் - மாறெலும்புத் துண்டுகள்/நெஞ்செலும்பு - 200 கிராம்
  2. கொத்துமல்லி - 2 தேக்கரண்டி
  3. கருமிளகு - 2 தேக்கரண்டி
  4. சீரகம் - 2 தேக்கரண்டி
  5. பெருஞ்சீரகம் - 1 தேக்கரண்டி
  6. சின்ன வெங்காயம் - 10
  7. இஞ்சி - 1/2 இன்சுக்கு சற்றே பெரிய துண்டு
  8. பூண்டு பற்கள் ( பெரிய அளவிலானதை நான் பயன்படுத்தினேன்) - 4ல் இருந்து 5
  9. உப்பு - தேவைக்கேற்ப
  10. மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
  11. மிளகு சுவைக்கேற்ற அளவு (உங்கள் விருப்பம்)
  12. நல்லெண்ணெய் - 1 தேக்கரண்டி +1 தேக்கரண்டி
  13. கொத்துமல்லி - 1 சிறிய கொத்து
  14. தண்ணீர் - 2 கப்

வழிமுறைகள்

  1. முதலில் மட்டனை நன்றாக தண்ணீர் மற்றும் மஞ்சள்தூள் சேர்த்து சுத்தப்படுத்திக்கொள்ளவும். நன்றாகக் கழுவவும்.
  2. எண்ணெய் விடாமல் கொத்துமல்லி, மிளகு, சீரகம், பெருஞ்சீரகம், சின்ன வெங்காயம், இஞ்சி, பூண்டு ஆகியவற்றை சிறுதீயில் இரண்டு நிமிடங்களுக்கு வறுத்துக்கொள்க. மசாலாப்பொருள்கள் கருகக்கூடாது. ஆறுவதற்காக எடுத்துவைக்கவும்.
  3. வெறுமனே வறுத்த மசாலாப் பொருள்களை ஒரு மிக்சியில் 5ல் இருந்து 6 விநாடிகளுக்கு கரடுமுரடான கலவையாக அடித்துக்கொள்ளவும்.
  4. ஒரு பிரஷர் குக்கரில், மட்டர், அரைத்தக் கரடுமுரடான மசாலாக் கலவை, மஞ்சள் தூள், உப்பு, கொத்துமல்லி, தண்ணீர் ஆகியவற்றை சேர்க்கவும். 1 தேக்கரண்டி நல்லெண்யை விடவும். குக்கரை மூடி 1 விசிலுக்கு 15 நிமிடங்களுக்கு எலும்புகள் உண்பதற்கு மிருதுவாகும்வரை சிம்மில் வேகவைக்கவும்.
  5. திறந்து, தேவைப்பட்டால் மட்டும் மிளகுத்தூளை சேர்த்து அதன்மீது 1 தேக்கரண்டி நல்லெண்யை விடவும். சூடாகப் பரிமாறவும்!

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்