வீடு / சமையல் குறிப்பு / கோதுமை பால் அல்வா

Photo of Tirunelveli Wheat Halwa by Saivardhini Badrinarayanan at BetterButter
554
5
0.0(0)
0

கோதுமை பால் அல்வா

Nov-07-2017
Saivardhini Badrinarayanan
180 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
60 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

கோதுமை பால் அல்வா செய்முறை பற்றி

பாரம்பரியமான திருநெல்வேலியின் கோதுமை பால் அல்வா

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. கோதுமை மாவு 1 கப்
  2. சக்கரை 2 கப்
  3. தண்ணீர் 3 கப்
  4. உணவு வண்ணம் 1 சிட்டிகை
  5. நெய் 1/2 கப்

வழிமுறைகள்

  1. முதலில் கோதுமை மாவை சப்பாத்தி மாவு போல் பிசைந்து கொள்ளவும்.
  2. பிசைந்த மாவை 3 கப் தண்ணீரில் 3 மணிநேரம் ஊறவைக்கவும்.
  3. 3 மணிநேரம் களித்து அந்த தண்ணீரில் மாவை நன்கு கலக்கவும்.
  4. நன்கு கலந்து பின்பு தண்ணிரை வடிகட்டி கொள்ளவும்.
  5. ஒரு கடாயில் வடிகட்டிய தண்ணீரை சேர்த்து நன்கு கலந்து கொண்டே இருக்கவும்.(மிதமான சூட்டில்)
  6. நன்கு வெந்து கஞ்சி பதம் வரும் பொழுது சக்கரை சேர்த்து கலந்து கொண்டே இருக்க வேண்டும்.
  7. சக்கரை நன்கு கரைந்த பின் கேசரி பவுடர் ஒரு சிட்டிகை தண்ணீரில் கலந்து அதை சேர்க்கவும்.
  8. பின் நெய் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கலந்து கொண்டே இருக்க வேண்டும்.
  9. பின் ஒரு கடாயில் நெய் சேர்த்து முந்திரி பருப்பு சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுத்து கொள்ளவும்.
  10. பின் முந்திரியை கோதுமை கலவையுடன் சேர்த்து நன்கு கலக்கவும்.
  11. பின் சேர்த்த நெய் அல்வாவை விட்டு பிரிஞ்சு வரும் போது அடுப்பை அணைக்கவும்.
  12. ஆறியவுடன் பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்