வீடு / சமையல் குறிப்பு / வௌவால் மீன் மசாலா வறுவல் (சென்னை பாணி)

Photo of Pomfret Masala Fry (Chennai Style) by Priya Alagappan at BetterButter
6424
30
0.0(0)
0

வௌவால் மீன் மசாலா வறுவல் (சென்னை பாணி)

Jan-10-2016
Priya Alagappan
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. வௌவால் மீன் - 8ல் இருந்து 10 துண்டுகள்
  2. மசாலா அரைப்பதற்கு: மிளகு - 1 தேக்கரண்டி
  3. பூண்டு - 6 எண்ணிக்கை
  4. இஞ்சி - ஒரு சிறிய துண்டு
  5. மஞ்கள்தூள் - 1/4 தேக்கரண்டி
  6. சிவப்பு மிளகாய்த்தூள் - 2 தேக்கரண்டி
  7. எலுமிச்சை - 1/2 பிழிந்துகொண்டது
  8. அடர்த்தியான புளிக்கரைசல் - 2 தேக்கரண்டி
  9. பொறிப்பதற்கு எண்ணெய்
  10. உப்பு - சுவைக்கு

வழிமுறைகள்

  1. மீன் துண்டுகளை சுத்தப்படுத்தி நன்றாகக் கழுவிக்கொள்ளவும். எடுத்து ஒரு பாத்திரத்தில் வைத்துக்கொள்க. இப்போது மேரினேட் செய்வதற்கு முன் மசாலாவை அரைக்கவேண்டும்.
  2. ஒரு மிக்சி ஜாரை எடுத்து மேலே குறிப்பிடப்பட்ட அனைத்துச் சேர்வைப்பொருள்களையும் ஒன்றன்பின் ஒன்றாக படத்தில் காண்பித்தபடி சேர்க்கவும். ஒரு அடர்த்தியான மசாலாவைப் பெறுவதற்கு சாந்தாக அரைத்துக்கொள்ளவும்.
  3. சமமாக மீன் மீது சாந்தை பூசி 1/2 மணி நேரத்திற்கு மேரினேட் செய்யவும். இப்போது தவா அல்லது கடாயை எண்ணெயுடன் எடுத்து நடுத்தர சூட்டில் சூடுபடுத்தவும்.
  4. சூடானது, மேரினேட் செய்த மீனைச் சேர்த்து மீன் நன்றாக வேகும்வரை பொறிக்கவும்.
  5. சாம்பார் சாதம், ரசம் மற்றும் அனைத்து வகையாக சாதங்கள், பிரியாணி, இன்னபிறவற்றோடு சூடாகப் பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்