Photo of Karnataka Spl Padhar Peni by Saivardhini Badrinarayanan at BetterButter
1486
4
0.0(0)
0

பதர் பேணி

Nov-07-2017
Saivardhini Badrinarayanan
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

பதர் பேணி செய்முறை பற்றி

பாரம்பரியமான கர்நாடகாவின் பதர் பேணி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • கர்நாடகா
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. மைதா 1 கப்
  2. சக்கரை 1/2 கப்
  3. நெய் 2 மேஜைக்கரண்டி
  4. சோடா உப்பு 1 சிட்டிகை
  5. பால் சிறிதளவு

வழிமுறைகள்

  1. ஒரு அகலமான தட்டில் நெய் சேர்த்து சோடா உப்பு ஒரு சிட்டிகை சேர்த்து நன்கு தேய்த்து , அதில் 2 மேஜைக்கரண்டி பொடி சக்கரை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
  2. பின் அதில் மைதா ஒரு கப் சேர்த்து நன்கு பிசைந்து சிறிது பால் தெளித்து பிசைந்து அரை மணி நேரம் ஊறவைக்கவும்.
  3. அரை மணி நேரம் கழித்து சிறிய உருண்டைகளாக செய்து சப்பாத்தி போல் தேய்த்து ஒன்றின் மேல் ஒன்று வைத்து உருட்டி துண்டுகளாக செய்து அழுத்தி கொள்ளவும்.
  4. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்த பின் ஒவொன்றாக போட்டு நன்கு பொன் நிறமாக பொரித்து எடுக்கவும்.
  5. ஒரு தட்டில் பொடி சக்கரை வைத்து கொள்ளவும். பொரித்த மைதா பூரியை இரண்டு பக்கமும் சக்கரை தடவி வைக்கவும். ( எண்ணெயில் இருந்து எடுத்தவுடன் சக்கரையில் தடவி வைக்கவும்.)

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்