வீடு / சமையல் குறிப்பு / காஷ்மீரி சிக்கன் முர்க்

Photo of KASHMIRI CHICKEN (MURG) by Jayanthy Asokan at BetterButter
718
4
0.0(0)
0

காஷ்மீரி சிக்கன் முர்க்

Nov-07-2017
Jayanthy Asokan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
40 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

காஷ்மீரி சிக்கன் முர்க் செய்முறை பற்றி

இது ஒரு சுவைமிக்க சிக்கன் கிரேவி. மிதமான காரம் இனிப்பு மற்றும் கிரீமி கிரேவியாகும். கரம் மசாலா மற்றும் முந்திரி பாதாம் உலர்ந்த திரட்சை கொண்டு செய்வதால் மிகவும் சுவையாகும்.

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • மீடியம்
  • டின்னெர் பார்ட்டி
  • ஜம்மு காஷ்மீர்
  • சிம்மெரிங்
  • ஸாட்டிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. சிக்கன் 1/2கிலோ
  2. வெங்காயம் 3
  3. தக்காளி 2
  4. உருளைக்கிழங்கு 1
  5. நெய் 3மேசைக்கரண்டி
  6. இஞ்சி பூண்டு விழுது 1 மேசைக்கரண்டி
  7. மிளகாய் தூள் 2டீஸ்பூன்
  8. மல்லி தூள் 2 மேசைக்கரண்டி
  9. மஞ்சள் தூள் 1/2டீஸ்பூன்
  10. பிரியாணி இலை 2
  11. தயிர் 1/2கப்
  12. தண்ணி 1கப்
  13. கரம் மசாலா தூள் 1டீஸ்பூன்
  14. உப்பு தேவைக்கு அளவு
  15. கொத்துமல்லி இலை 2 மேசைக்கரண்டி
  16. வறுத்து அரைக்க
  17. முந்திரி 15
  18. பாதாம் 12
  19. காய்ந்த திரட்சை 1மேசைக்கரண்டி

வழிமுறைகள்

  1. 2 1/2வெங்காயத்தை வெட்டி ப்ரவ்ன் கலர் வரும் வரை வதக்கி மிக்ஸியில் பேஸ்ட் செய்யவும்.
  2. தக்காளியை கூழாக்கி கொள்ளவேண்டும்.
  3. பாதாம் முந்திரி திராட்சை அரைத்து கொள்ள வேண்டும்.
  4. கடாயில் நெய் ஊற்றி பிரியாணி இலை வதக்க வேண்டும்.
  5. பின் 1/2 வெங்காயத்தை பொடியாக வெட்டி அதில் வதக்க வேண்டும். உருளைக்கிழங்கு சேர்க்கவேண்டும்.
  6. நன்கு பொன்னிறம் வரும் வரை வதக்கவேண்டும். இஞ்சி பூண்டு,வெங்காய விழுது சேர்த்து பச்ச வாசனை போகும் வரை வதக்க வேண்டும்.
  7. எண்ணெய் பிரிந்தபின் அனைத்து பொடிகளையும் சேர்க்கவேண்டும்.
  8. சிக்கன் சேர்த்து 3 நிமிடம் வதக்கி தக்காளி விழுது சேர்க்கவேண்டும்.
  9. எண்ணெய் பிரியும்வரை வதக்கி தயிர் தண்ணி சேர்த்து 10 நிமிடம் வேகவேண்டும்.
  10. அரைத்த விழுது சேர்க்கவேண்டும். கரம் மசாலா உப்பு மற்றும் மல்லி சேர்த்து 5நிமிடம் மூடி வைத்து குறைந்த தணலில் வேக வேண்டும்.
  11. கஷ்மீர் சிக்கன் முர்க் ரெடி.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்