வீடு / சமையல் குறிப்பு / பீட்ரூட் கட்லெட்

Photo of Beetroot Cutlet by Saivardhini Badrinarayanan at BetterButter
666
2
0.0(0)
0

பீட்ரூட் கட்லெட்

Nov-08-2017
Saivardhini Badrinarayanan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

பீட்ரூட் கட்லெட் செய்முறை பற்றி

எளிமையான பீட்ரூட் கட்லெட் மிகவும் ஆரோகியமான ஒரு மாலை நொறுக்கு

செய்முறை டாக்ஸ்

  • முட்டை இல்லா
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • பான் பிரை
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. பீட்ரூட் 1 கப் (துருவியது)
  2. உருளைகிழங்கு 2
  3. முட்டைகோஸ் 1/2 கப் (துருவியது)
  4. பெரிய வெங்காயம் 1
  5. இஞ்சி பூண்டு விழுது 1 மேஜைக்கரண்டி
  6. மிளகாய் தூள் 1 மேஜைக்கரண்டி
  7. மல்லி தூள் 1/2 மேஜைக்கரண்டி
  8. ஜீரக தூள் 1/2 மேஜைக்கரண்டி
  9. சாட் மசாலா 1/4 மேஜைக்கரண்டி
  10. உப்பு தேவையானளவு
  11. கார்ன் பிளார் மாவு 1 மேஜைக்கரண்டி
  12. மைதா மாவு 1 மேஜைக்கரண்டி
  13. தண்ணீர் சிறிதளவு
  14. எண்ணெய் பொரிப்பதற்கு
  15. மல்லித்தழை சிறிதளவு
  16. பிரட் துகள்கள்

வழிமுறைகள்

  1. முதலில் உருளைக்கிழங்கை 4 துண்டுகளாக நறுக்கி ஒரு குக்கரில் 3 விசில் விட்டு வேகவைத்து , பின் தோல் நீக்கி நன்கு மசித்து கொள்ளவும்.
  2. பின் ஒரு கடாயில் எண்ணெய் சிறிதளவு சேர்த்து பெரிய வெங்காயத்தை சிறியதாக நறுக்கி அதில் சேர்க்கவும்.
  3. வெங்காயம் சேர்த்த பின் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு பச்சை வாசனை போகும் வரை பொன் நிறமாக வறுத்து கொள்ளவும்.
  4. பின் அதில் மிளகாய் தூள், மல்லி தூள், ஜீரக தூள் , சாட் மசாலா சேர்த்து வதக்கவும்.
  5. பின் துருவிய பீட்ரூட் மற்றும் முட்டைகோஸ் சேர்த்து நன்கு வதக்கவும். சிறுது தண்ணீர் சேர்த்து வேகவைக்கவும்.
  6. வெந்த பின் மசித்த உருளைக்கிழங்கு சேர்த்து வதக்கவும். பின் தேவையானளவு உப்பு சேர்த்து , கொத்துமல்லி இலை சேர்த்து இறக்கவும்.
  7. பின் சூடு ஆறியவுடன் சிறு உருண்டைகளாக பிடிக்கவும்.
  8. ஒரு கிண்ணத்தில் மைதா, கார்ன் பிளார் மாவு மற்றும் தண்ணீர் சேர்த்து நன்கு கட்டி இல்லாமல் கலக்கவும்.
  9. பின் அந்த உருண்டைகளை வடை போல் தட்டி மைதா கலவையில் நினைத்து பிரட் துகள்களில் பிரட்டி வைக்கவும்.
  10. பின் தோசை தவா சூடு செய்து அதில் எண்ணெய் தடவி ஒவொன்றாக செய்த கட்லட் வைக்கவும். மேலே எண்ணெய் தடவும். இரு பக்கமும் பொன் நிறமாக வெந்தவுடன் தக்காளி சாஸ் வைத்து பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்