Photo of Honey chocolate almond fudge by Rajeswari Annamalai at BetterButter
836
3
0.0(1)
0

Honey chocolate almond fudge

Nov-08-2017
Rajeswari Annamalai
75 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
150 நிமிடங்கள்
சமையல் நேரம்
9 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • முட்டை இல்லா
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • சிம்மெரிங்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 9

  1. 1/2 கப் + 1/8 கப் பாதாம்
  2. 1/8 கப் நறுக்கிய வறுத்த பாதாம்
  3. 1/8 கப் காய்ந்த தேங்காய் துருவல்
  4. 1/2 கப் ஆர்கானிக் சர்க்கரை
  5. 1/4 கப் + 1 மேஜைக்கரண்டி தேன்
  6. 1/2 கப் டார்க் சாக்லெட் சிப்ஸ்
  7. 2 மேஜைக்கரண்டி உப்பில்லாத வெண்ணெய்
  8. 1 கப் பால் பௌடர்
  9. 1/2 தேக்கரண்டியளவு வெண்ணிலா எசன்ஸ்

வழிமுறைகள்

  1. பாதாம் பருப்பை ஒரு மணி நேரம் வெந்நீரில் ஊற வைக்கவும்
  2. ஊரவைத்த பாதாம் பருப்பின் தோல் நீக்கி மையாக அரைத்து கொள்ளவும் (4 - 5 மேஜைக்கரண்டி தண்ணீர் சேர்த்து)
  3. ஓரு கணமான பாத்திரத்தில் பாதாம் பேஸ்ட், தேன், சர்க்கரை சேர்த்து மிக்ஸ் செய்யவும்.
  4. அடுப்பை சிம்மில் வைத்து, கொஞ்சம் நேரம், ஓரு கம்பி பதம் வரும்வரை கிண்டவும்.(சுமார் 4-5 நிமிடங்கள்)
  5. பிறகு வெண்ணெய், சாக்லேட் சிப்ஸ், வெண்ணிலா சேர்த்து கலக்கவும். அடுப்பை அணைக்கவும்.
  6. இரண்டு நிமிடம் பிறகு, பாத்திரத்தை இறக்கி, கலவையை கலக்கவும்
  7. கொஞ்சம் சூடு தணிந்த பிறகு, பால் பவுடர் மற்றும் நறுக்கிய பாதாமை சேர்க்கவும்.
  8. நன்று கலந்து, பார்ச்மென்ட் பேபர் வைக்கப்பட்டுள்ள ட்ரேயில் ஊற்றி தட்டவும்.
  9. காய்ந்த தேங்காய் துருவல் தூவி ஆறவிடவும்.
  10. 2 மணி நேரம் ரெப்ரிஜரேட் செய்ய வேண்டும். பிறகு கட் செய்து பரிமாறவும்.

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Saranya Manickam
Nov-08-2017
Saranya Manickam   Nov-08-2017

Hi, kindly enter the ingredients and recipe in tamil.

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்