வீடு / சமையல் குறிப்பு / மசால் வடை

Photo of Masal vadai by Krishnasamy Vidya Valli at BetterButter
0
2
0(0)
0

மசால் வடை

Nov-08-2017
Krishnasamy Vidya Valli
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

மசால் வடை செய்முறை பற்றி

குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான மாலைநேர ஸ்நாக்ஸ் இது

செய்முறை டாக்ஸ்

  • శాఖాహారం
  • తేలికైనవి
  • పిల్లలకు నచ్చే వంటలు
  • తమిళనాడు
  • వేయించేవి
  • చిరు తిండి
  • గుడ్డు లేని

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. துவரம்பருப்பு - 1 cup
  2. கடலைப்பருப்பு - 1 cup
  3. மிளகாய் வத்தல் - 2அல்லது3
  4. பச்ச மிளகாய் - 2
  5. வெங்காயம் - 2 பெரியது அல்லது 15 சின்னது
  6. கருவேப்பிலை - 2 ஆர்க்கு
  7. பெருங்காயம் - 2 சிட்டிகை
  8. இஞ்சி - சிறிய துண்டு ( optional )
  9. தேங்காய் துருவல் - 1 தேக்கரண்டி (optional)
  10. உப்பு - 1 1 / 4 தேக்கரண்டி
  11. எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. கடலைப்பருப்பு துவரம்பருப்பு சேர்த்து அரைமணிநேரம் ஊறவைக்கவும்
  2. ஊறவைத்ததை வடிகட்டியில் போட்டு தண்ணீரை வடித்து விடவும்
  3. மிக்ஸியில் மிளகாய் வத்தல் பச்ச மிளகாய் இஞ்சி பெருங்காயம் உப்பு சேர்த்து கரகரப்பாக அரைக்கவும்
  4. பின்னர் வடிகட்டிய பருப்பில் ஒரு தேக்கரண்டி தனியாக எடுத்து வைக்கவும்
  5. ஏற்கனவே அரைத்ததுடன் பருப்பு சேர்த்து கரகரப்பாக தண்ணீர் விடாமல் அரைக்கவும்
  6. வெங்காயத்தை பொடியாக நறுக்கிக்கொள்ளவும்
  7. அரைத்த விழுதுடன் நறுக்கிய வெங்காயம் தேங்காய் துருவல் கருவேப்பிலை தனியாக வைத்த பருப்பு சேர்த்து நன்றாக கலந்து வைக்கவும்
  8. கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கலவையை சிறுசிறு வடைகளாக தட்டி எண்ணெய்யில் பொரித்து எடுத்தால் முறுமுறு மசால் வடை தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்