வீடு / சமையல் குறிப்பு / பால் கொழுக்கட்டை

Photo of Paal Kozhukkattai by Banupriya Jawahar at BetterButter
5
4
0.0(0)
0

பால் கொழுக்கட்டை

Nov-08-2017
Banupriya Jawahar
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

பால் கொழுக்கட்டை செய்முறை பற்றி

எளிதில் செய்யக்கூடிய குழந்தைகளுக்கான ஆரோக்கிய உணவு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. பச்சரிசி மாவு 1/2 கப்
  2. புழுங்கல் அரிசி மாவு 1/2 கப்
  3. பால் 1/2 லிட்டர்
  4. தேங்காய் துருவல் 1/2 கப்
  5. ஜீனி 3/4 கப்
  6. ஏலக்காய் தூள் 2 சிட்டிகை
  7. உப்பு 1 சிட்டிகை

வழிமுறைகள்

  1. பாலை காய்ச்சிக் கொள்ளவும்.
  2. புழுங்கல் அரிசி மாவு, பச்சரிசி மாவு இரண்டையும் கலக்கவும். (பச்சரிசி, புழுங்கல் அரிசி இரண்டையும் சம அளவில் எடுத்து கழுவி, நிழலில் காய வைத்து மிஷினில் திரித்து வைத்துக் கொள்ளலாம்)
  3. மாவில் 1 சிட்டிகை உப்பு, 1 சிட்டிகை ஏலக்காய் தூள், 1/4 கப் தேங்காய் துருவல், 1/2 கப் ஜீனி சேர்க்கவும்.
  4. வெதுவெதுப்பான பால் கலந்து மாவைப் பிசையவும்.
  5. சப்பாத்தி மாவை விட சற்று நெகிழ்வாக இருந்தால், கொழுக்கட்டை மென்மையாக வரும்.
  6. பிசைந்த மாவை குட்டி குட்டி உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். விருப்பப்பட்ட டிசைன்களிலும் உருட்டிக் கொள்ளலாம்.
  7. காய்ச்சிய பாலை அடுப்பில் ஏற்றவும்.
  8. பால் சூடானதும், உருட்டிய கொழுக்கட்டைகளை ஒன்றோடொன்று ஒட்டாதவாறு பாலில் சேர்க்கவும்.
  9. அடிப்பிடிக்காதவாறு அவ்வப்போது கிண்டி விடவும்.
  10. கொழுக்கட்டை வெந்ததும், 1/4 கப் ஜீனி, 1/4 கப் தேங்காய் துருவல், 1 சிட்டிகை ஏலக்காய் தூள் சேர்க்கவும்.
  11. பாலும் ஜீனியும் கலந்ததும் அடுப்பை அணைக்கவும்.
  12. விருப்பப்பட்டால் 1 ஸ்பூன் நெய் சேர்த்துக் கொள்ளலாம்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்