Photo of Onion othappam by Krishnasamy Vidya Valli at BetterButter
681
3
0.0(1)
0

Onion othappam

Nov-08-2017
Krishnasamy Vidya Valli
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

Onion othappam செய்முறை பற்றி

குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடும் டிபன் வகை இது செய்வது மிகமிக சுலபம்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • சௌத்இந்தியன்
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. தோசை மாவு - 10 கரண்டி (மீடியம் ஸைஸ் குழி கரண்டி )
  2. வெங்காயம் - 4 பெரியது அல்லது 30 சின்னது
  3. நல்லெண்ணெய் - 10 தேக்கரண்டி
  4. உப்பு - 1 சிட்டிகை
  5. சமையல்எண்ணெய் - 2தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. வெங்காயத்தை பொடியாக நறுக்கிக்கொள்ளவும்
  2. கடாயில் சமையல் எண்ணெய் விட்டு காய்ந்ததும் வெங்காயம் மற்றும் உப்பு சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்
  3. தோசை கல் காய்ந்ததும் எண்ணெய் தடவி சிறுசிறு ஊத்தப்பமாக மாவு விட்டு அதன்மேல் வதக்கிய வெங்காயம் போட்டு கரண்டியால் பிரஸ் பண்ணவும். ஒரு கல்லிலேயே நான்கு அல்லது ஐந்து ஊத்தப்பம் விடலாம்.
  4. மாவு அளவு குறைவாகவும் வெங்காயம் அளவு அதிகமாகவும் இருக்கும் போது குழந்தைகள் விரும்பி உண்பார்கள்
  5. தோசை திருப்பி போடும்போது அடுப்பை சிம்மில் வைக்கவும்
  6. எண்ணெய் விடும் போது தோசை மேல் விடாமல் ஓரங்களில் மட்டும் விடவும்
  7. முறுமுறு வெங்காய ஊத்தப்பம் ரெடி

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Vaishnavi somu
Nov-08-2017
Vaishnavi somu   Nov-08-2017

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்