வீடு / சமையல் குறிப்பு / கார பருப்பு தோசை

Photo of Spicy dal dosa by Rajeswari Annamalai at BetterButter
828
3
0.0(0)
0

கார பருப்பு தோசை

Nov-08-2017
Rajeswari Annamalai
300 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
10 மக்கள்
பரிமாறவும்

கார பருப்பு தோசை செய்முறை பற்றி

ஆரோக்கியமான பருப்பு தோசை

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • தினமும்
  • தமிழ்நாடு
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 10

  1. 1/2 கப் துவரம் பருப்பு
  2. 1/2 கப் கடலை பருப்பு
  3. 1/4 கப் பயத்தம் பருப்பு
  4. 1/4 கப் உளுந்து
  5. 1/2 தேக்கரண்டியளவு வெந்தயம்
  6. 1/2 கப் ப்ரவுன் அரிசி
  7. 1/2 கப் புழுங்கல் அரிசி
  8. 4 - 6 காய்ந்த மிளகாய்
  9. வேண்டும் என்றால் 3 - 4 பச்சை மிளகாய்
  10. 10 - 15 பூண்டு பல்
  11. 1 சின்ன எலுமிச்சை அளவு புளி
  12. 2 மேஜைகரண்டி சோம்பு
  13. கல் உப்பு தேவையான அளவு
  14. தண்ணீர் தேவையான அளவு
  15. வேண்டும் என்றால் - வெங்காயம், கொத்தமல்லி, கேரட், பச்சை மிளகாய்

வழிமுறைகள்

  1. பருப்பை கழுவி ஊறவைக்கவும்
  2. அரிசி மற்றும் வெந்தயம் கழுவி ஊறவைக்கவும்
  3. 5 மணி நேரம் ஊற வைக்கவும்
  4. 1 மணி நேரம் அறைக்கும் முன்பு காய்ந்த மிளகாயை ஊற வைக்கவும்
  5. மிக்சியில் சோம்பு, பூண்டு, உப்பு, புளி, மிளகாயை சேர்த்து அரைத்து கொள்ளவும்
  6. பின்னர் அரிசி மற்றும் பருப்பு சேர்த்து அரைத்து கொள்ளவும்(தோசை மாவு பதத்தில்)
  7. தவா சூடான பிறகு தோசை மாவு ஊற்றி நன்கு வெந்ததும் எடுக்கவும்
  8. சட்னியுடன் பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்