வீடு / சமையல் குறிப்பு / கஸ்டர்ட் ஜாம் குக்கீஸ்

Photo of Custard thumbprint jam cookies by Swathy Nandhini at BetterButter
43
2
0.0(0)
0

கஸ்டர்ட் ஜாம் குக்கீஸ்

Nov-08-2017
Swathy Nandhini
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
10 மக்கள்
பரிமாறவும்

கஸ்டர்ட் ஜாம் குக்கீஸ் செய்முறை பற்றி

கஸ்டர்ட் ஜாம் குக்கீஸ் என் மகளுக்கு மிகவும் பிடித்த குக்கீஸ். இது கஸ்டர்ட் பவுடரில் செய்யும் சுவையான ஸ்நாக்ஸ்.

செய்முறை டாக்ஸ்

 • மீடியம்
 • கிட்ஸ் ரெசிப்பிஸ்
 • பேக்கிங்
 • ஸ்நேக்ஸ்
 • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 10

 1. கோதுமை மாவு  - 1 கப்
 2. கஸ்டர்டு பவுடர்   - 1/2 கப்
 3. பேக்கிங் பவுடர்   - 1 டீஸ்பூன்
 4. சோள மாவு (corn flour)  - 2 டேபிள் ஸ்பூன்
 5. சர்க்கரை - 1/2 கப்
 6. தயிர் - 3 டேபிள் ஸ்பூன்
 7. வெண்ணிலா எசன்ஸ் - 1/2 டீ ஸ்பூன்
 8. எண்ணெய் - 1/4 கப்
 9. ஜாம் - தேவைக்கேற்ப 

வழிமுறைகள்

 1. ஜாம் ஐ உருக்கி வைத்து கொள்ளவும் (அல்லது 1 நிமிடம் மைக்ரோ வேவ் அவனில் வைத்து எடுக்கலாம்)
 2. சர்க்கரையும் எண்ணெயையும் ஒரு பாத்திரத்தில் எடுத்து கொண்டு நன்றாக அடித்து கொள்ளவும். 
 3. தயிரை இதனுடன் சேர்த்து நன்றாக நுரைக்கும் வரை அடிக்கவும். 
 4. இதனுடன் கோதுமை மாவையும் பேக்கிங் பவுடரையும் ஒன்றாக சலித்து சேர்க்கவும். 
 5. கஸ்டர்டு பவுடர் , சோள மாவு மற்றும் வெண்ணிலா எசன்ஸ் ஒன்றாக சேர்த்து மென்மையாக பிசையவும். 
 6. மாவை சமப்படுத்தி வட்ட வடிவமாக குக்கீ கட்டர் கொண்டு கட் செய்யவும், இதன் நடுவில் கட்டை விரலை வைத்து சிறு குழி உண்டாக்கவும் (Thumb Print). இந்த குழிகளில் உருக்கி வைத்த ஜாம் ஐ நிரப்பவும்.
 7. இதனை எண்ணெய் தடவி பேக்கிங் ட்ரெய் ல் போதுமான இடைவெளி விட்டு அடுக்கவும்.
 8. பேக்கிங் அவனை 180°C ல் சூடுபடுத்தவும். பிறகு திறந்து பேக்கிங் ட்ரெய் யை உள்ளே வைத்து மூடி 180°C ல் 12-15 நிமிடங்கள் bake செய்யவும்.
 9. பிறகு சிறிது சர்க்கரையை மேலே தூவி ஆறவிடவும். 
 10. சுவையான தம்பிரிண்ட் ஜாம் குக்கீஸ் தயார். 

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்