வீடு / சமையல் குறிப்பு / பிஷ் ஃபிங்கர்ஸ்

Photo of Fish Fingers by Banupriya Jawahar at BetterButter
1314
2
0.0(0)
0

பிஷ் ஃபிங்கர்ஸ்

Nov-08-2017
Banupriya Jawahar
90 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

பிஷ் ஃபிங்கர்ஸ் செய்முறை பற்றி

குழந்தைகளைக் கவரும் மீன் உணவு

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • மீடியம்
  • தமிழ்நாடு
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. சதைப்பற்றான மீன் 1/2 கிலோ
  2. கடுகு 3 தேக்கரண்டி.
  3. மிளகு 3 தேக்கரண்டி
  4. எலுமிச்சை 1
  5. முட்டை ஒன்றின் வெள்ளை கரு
  6. பிரட் க்ரம்ப்ஸ் 1 கப்
  7. உப்பு தேவையான அளவு
  8. எண்ணெய் பொரிப்பதற்கு

வழிமுறைகள்

  1. மீனை சுத்தம் செய்து கொள்ளவும்
  2. மீனின் முள்ளை அகற்றவும்.
  3. சதைப் பகுதியை மட்டும் பிரித்தெடுக்கவும்.
  4. சதைப்பகுதியை மென்மையாக உருட்டி நீளமான விரல் வடிவத்தில் செய்து கொள்ளவும்.
  5. கடுகு மற்றும் மிளகை மிக்ஸியில் நைஸாக தூளாக்கவும்.
  6. விரல் வடிவ மீனை துண்டுகளை கடுகு தூள், மிளகு தூள், உப்பு, எலுமிச்சை சாறு கலந்த கலவையில் நன்கு புரட்டி எடுத்து 1 மணிநேரம் ஊற வைக்கவும்.
  7. முட்டையின் வெள்ளை கருவில் உப்பு சேர்த்து நுரை வர அடித்து கொள்ளவும்.
  8. வாணலியில் எண்ணெய் விட்டு அடுப்பில் ஏற்றவும்.
  9. ஊறிய மீனை துண்டுகளை (Marinated fish), அடித்து வைத்திருக்கும் முட்டையில் நன்கு தோய்த்து எடுத்து, பிரட் க்ரம்ஸ்-ல் புரட்டி எண்ணெயில் பொரித்து எடுக்கவும்
  10. மயோனைஸுடன் பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்