வீடு / சமையல் குறிப்பு / ஆலு சன்னா சாட்

Photo of Aloo Channa Chat by Saivardhini Badrinarayanan at BetterButter
490
3
0.0(0)
0

ஆலு சன்னா சாட்

Nov-09-2017
Saivardhini Badrinarayanan
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

ஆலு சன்னா சாட் செய்முறை பற்றி

ஆரோக்கியமான மாலை சிற்றுண்டி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. உருளைக்கிழங்கு 1
  2. கொண்டை கடலை 1 கப்
  3. ஓமம் பொடி 1/2 கப்
  4. பெரிய வெங்காயம் நறுக்கியது 1/4 கப்
  5. தக்காளி நறுக்கியது 1/4 கப்
  6. வெள்ளரிக்காய் 1/4 கப்
  7. மிளகாய் தூள் 1 மேஜைக்கரண்டி
  8. சாட் மசாலா 1/2 மேஜைக்கரண்டி
  9. ஜீரக தூள் 1/2 மேஜைக்கரண்டி
  10. உப்பு தேவையானளவு
  11. எலுமிச்சை சாறு 2 மேஜைக்கரண்டி
  12. கொத்துமல்லி இலை சிறிதளவு

வழிமுறைகள்

  1. முதலில் ஒரு குக்கரில் உருளைக்கிழங்கை 3 விசில் விட்டு வேகவைத்து சிறிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.
  2. பின் வெள்ளை கொண்டை கடலையை முதல் நாள் ஊறவைத்து மறுநாள் குக்கரில் 5 விசில் விட்டு வேகவைத்து கொள்ளவும்.
  3. பின் ஒரு பாத்திரத்தில் வேக வைத்த உருளைக்கிழங்கு, கொண்டை கடலை , வெங்காயம் ,தக்காளி, வெள்ளரிக்காய், மிளகாய் தூள் ,சாட் மசாலா, ஜீரக தூள், உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்.
  4. பின் அதில் ஓமபொடி , கொத்துமல்லி இலை மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்