வீடு / சமையல் குறிப்பு / பனீர் கட்லெட்

Photo of Paneer cutlet by saranya sathish at BetterButter
1057
2
0.0(0)
0

பனீர் கட்லெட்

Nov-09-2017
saranya sathish
40 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

பனீர் கட்லெட் செய்முறை பற்றி

உருளைக்கிழங்கு பனீர் வைத்து செய்ய பட்ட சத்தான மாலை நேர ஸ்நாக்ஸ்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. உருளைக்கிழங்கு - 2
  2. மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி
  3. மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
  4. கரம் மசாலா - 1 தேக்கரண்டி
  5. சீரகம் தூள் - 1 தேக்கரண்டி
  6. பிரட் தூள் - 1 கப்
  7. உப்பு - தேவையான அளவு
  8. எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
  9. சோள மாவு - 1/2 கப்
  10. பனீர் - 1 கப்

வழிமுறைகள்

  1. குக்கரில் உருளைக்கிழங்கை வேக வைத்துக் கொள்ளவும். நன்கு ஆறிய பின் தோலுரித்து மசித்து வைக்கவும்.
  2. ஒரு பாத்திரத்தில் மசித்து வைத்துள்ள உருளைக்கிழங்கு மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு, கரம் மசாலா, சீரகம் தூள், பனீர் சேர்த்து நன்கு கலக்கவும்.
  3. அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் மிதமான சூட்டில் வைக்கவும்.
  4. சோள மாவை தண்ணீர் சேர்த்து கரைத்து வைக்கவும்.
  5. கலவையை எலுமிச்சை அளவு எடுத்து உருண்டையாக உருட்டி சோள மாவு கரைசலில் டிப் செய்து பிரட் தூளில் பிரட்டி தட்டி எண்ணெய்யில் போடவும்.
  6. சிறிது நேரம் கழித்து திருப்பி போடவும். இரண்டு பக்கமும் பொன்னிறமானதும் எடுத்து விடவும்.
  7. தக்காளி சாஸுடன் பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்