வீடு / சமையல் குறிப்பு / பருப்பு போளி

Photo of Dal poli by saranya sathish at BetterButter
678
4
0.0(0)
0

பருப்பு போளி

Nov-09-2017
saranya sathish
180 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
45 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

பருப்பு போளி செய்முறை பற்றி

சுவையான மாலை நேர சிற்றுண்டி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • பண்டிகை காலம்
  • கர்நாடகா
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. மைதா மாவு - 1 கப்
  2. வெல்லம் - 1/2 கப்
  3. தேங்காய் துருவல் - 1/4 கப்
  4. எண்ணெய்
  5. ஏலக்காய்தூள் - 1/4 தேக்கரண்டி
  6. மஞ்சள் தூள் - சிறிது
  7. கடலைப்பருப்பு - 1/2 கப்
  8. உப்பு - 1/4 தேக்கரண்டி
  9. நெய் - சிறிது

வழிமுறைகள்

  1. மைதா மாவு உப்பு மஞ்சள் தூள் தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு சற்றே தளர்வாக பிசையவும். பின் எண்ணெய் சேர்த்து 3 மணி நேரம் ஊற வைக்கவும்.
  2. கடலை பருப்பை தனியாக ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.
  3. ஒரு பாத்திரத்தில் கடலைப்பருப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைக்கவும்.முக்கால் பதத்திற்கு வேக வைத்து தண்ணீரை வடித்து விட்டு சிறிது நேரம் ஆற விடவும்.
  4. நன்றாக ஆறிய பின் தேங்காய் துருவலையும் ஏலக்காய் சேர்த்து மிக்ஸ்சியில் ஒரு சுற்று சுற்றி எடுக்கவும்.
  5. அடுப்பில் ஒரு பாத்திரத்தில் வெல்லத்துடன் தண்ணீர் சேர்த்து பாகு காய்ச்சி வடிகட்டியில் வடித்துக் கொள்ளவும்.
  6. பிறகு அடுப்பில் கடாயை வைத்து வடித்து வைத்துள்ள வெல்லப்பாகை ஊற்றவும். பாகு கொதிக்க ஆரம்பித்ததும் அரைத்து  வைத்துள்ள கடலைப்பருப்பு கலவையை சேர்த்து கிளறவும்.
  7. கலவை கெட்டியானதும் அடுப்பை அணைத்து சிறிது நேரம் ஆறவிடவும். ஆறிய பின் சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.    
  8. பின் மைதா மாவை உருண்டையாக உருட்டி சிறு சப்பாத்தியாக இடவும்.
  9. நடுவில் பருப்பு வெல்ல உருண்டையை வைத்து மடித்து மீண்டும் சப்பாத்தியாக இடவும்.
  10. பின் தோசை கல்லை சூடு செய்து தேய்த்து வைத்த போளியை நெய் சேர்த்து சுட்டு எடுக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்