வீடு / சமையல் குறிப்பு / சிம்பிள் வெண்ணிலா ஸ்பான்ஜ் கப் கேக்

Photo of Simple vannila sponge cupcakes. by Jayanthy Asokan at BetterButter
798
3
0.0(0)
0

சிம்பிள் வெண்ணிலா ஸ்பான்ஜ் கப் கேக்

Nov-09-2017
Jayanthy Asokan
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

சிம்பிள் வெண்ணிலா ஸ்பான்ஜ் கப் கேக் செய்முறை பற்றி

கேக் என்றால் அனைவருக்கும் பிரியம்.குழந்தைகளுக்கு கேக் மற்றும் சாக்லேட் பிடிக்கும் . வெண்ணிலா ஸ்பான்ஜ் கப் கேக் மிக எளிமையான முறையில் செய்யமுடியும்.

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • மீடியம்
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பேக்கிங்
  • டெஸர்ட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. மைதா 150g
  2. முட்டை 3
  3. வெண்ணெய் 150g
  4. சக்கரை 130g
  5. பேக்கிங் பவுடர் 3g
  6. பேக்கிங் சோடா 1g
  7. வெண்ணிலா எசென்ஸ் 11/2டீஸ்பூன்

வழிமுறைகள்

  1. ஓவெனை 160 சென்டிகிரேடு ப்ரீ ஹீட் செய்யயும்.
  2. ஒரு பௌலில் வெண்ணெய் சர்க்கரை ஒன்றாக போட்டு ஹாண்ட் மிக்ஸரில் கிரீம் பதத்திற்கு பீட் செய்ய வேண்டும்.
  3. பின் முட்டையை ஒன்று ஒன்றாக கலக்க வேண்டும்.
  4. சலித்த மாவு, சோடா உப்பு, பேக்கிங் பவுடர் மூன்று முறையாக இட்டு கலக்க வேண்டும்.
  5. எசென்ஸ் கலக்க வேண்டும். கட் அண்ட் போல்ட் முறையில் மாவை கலக்க வேண்டும்.
  6. Muffin தட்டில் கேக் லைனர் வைத்து 3/4கப் வரை நிரப்ப வேண்டும்.
  7. ப்ரீ ஹீட் ஆன ஓவெனில் 160சென்டிகிரேடு 17நிமிடம் வைத்து பின் 180இல் 3நிமிடம் வைக்கவேண்டும்.
  8. பஞ்சு போன்ற வெண்ணிலா கப் கேக் தயார்.
  9. தினமும் உண்ண கூடிய கேக் சுட்டிகளுக்கு தயார்.
  10. 12 கப் கேக் இவ்வளவிற்க்கு வரும்.
  11. கிராஸ் செக்க்ஷன்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்