வீடு / சமையல் குறிப்பு / கடலைப்பருப்பு ஜவ்வரிசி வடை.

Photo of Kadalai paruppu Javari Vadai. by Panchavarnam Ramasamy at BetterButter
1068
3
0.0(0)
0

கடலைப்பருப்பு ஜவ்வரிசி வடை.

Nov-09-2017
Panchavarnam Ramasamy
1800 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

கடலைப்பருப்பு ஜவ்வரிசி வடை. செய்முறை பற்றி

கடலைப்பருப்பும் ஜவ்வரிசியும் சேர்த்து செய்யப்பட்ட வடை.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • சைட் டிஷ்கள்
  • லோ கலோரி

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கடலைப்பருப்பு. 200கிராம்
  2. ஜவ்வரிசி. 100கிராம்.
  3. பெ.வெங்காயம். இரண்டு
  4. காய்ந்த மிளகாய் மூன்று
  5. சோம்பு. ஒரு டீஸ்பூன்
  6. இஞ்சி ஒரு சிறு துண்டு
  7. கறிவேப்பிலை
  8. மல்லித்தழை
  9. பட்டை ஒரு சிறு துண்டு
  10. உப்பு தேவையான அளவு
  11. ஆயில். அரை லிட்டர்

வழிமுறைகள்

  1. கடலைப்பருப்பை ஒரு மணிநேரம் ஊற வைத்து நீரை வடிய விடவும்.
  2. ஜவ்வரிசியை அரை மணி நேரம் ஊற வைத்து நீரை வடிய விடவும்.
  3. பெ.வெங்காயம், காய்ந்த மிளகாய் ஆகியவற்றை பொடிப்பொடியாக நறுக்கி வைக்கவும். வேண்டுமானால் மிளகாயை மிக்சியில் போட்டு இரண்டு சுற்று விடலாம்.
  4. கறிவேப்பிலை மல்லித்தழையையும் பொடியாக நறுக்கி வைக்கவும். இஞ்சியை தோல் நீக்கி பொடியாக நறுக்கவும். .பட்டையைப் பொடித்து வைக்கவும். கடலைப்பருப்பைக் கெட்டியாக கொரகொரப்பாக அரைக்கவும்.
  5. ஆட்டி வைத்த கடலைப்பருப்புடன் ஊறிய ஜவ்வரிசி வெட்டி வைத்த பெ.வெங்காயம் பொடியாக வெட்டிய காய்ந்தமிளகாய் சோம்பு கறிவேப்பிலை மல்லித்தழை இஞ்சி தே .அளவு உப்பு சேர்த்து கெட்டியாகப்பிசையவும்.
  6. கடாயில் ஆயிலை ஊற்றி காய விடவும். சிறுசிறு உருண்டைகளாக உருட்டி லேசாகத்தட்டி காய்ந்த எண்ணெயில் போடவும்.
  7. இருபுறமும் வெந்த பின் எடுக்கவும். இந்த வடை வித்தியாசமான சுவையுடன் சிறுவர்களைச்சுண்டி இழுக்கும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்